புதுக்கோட்டை மாவட்டம் உதயமான நாள் நினைவு ஸ்தூபிக்கு மரியாதை




புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு தனி சிறப்பு உண்டு. நாடு சுதந்திரம் 1947-ம் ஆண்டு பெற்ற பிறகும் புதுக்கோட்டை சமஸ்தானம் தனியாக இயங்கி வந்தது. அதன்பின் 1948-ம் ஆண்டு நாட்டுடன் புதுக்கோட்டை இணைக்கப்பட்டது. அப்போது மன்னராக இருந்த ராஜகோபால தொண்டைமான், சமஸ்தானத்தை இணைத்து கையெழுத்திட்டார். திருச்சி, தஞ்சாவூர் ஒருங்கிணைந்து இருந்த பகுதிகளை பிரித்து புதுக்கோட்டையை தனி மாவட்டமாக கடந்த 1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி உருவாக்கப்பட்டது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி புதுக்கோட்டை மாவட்டத்தை அறிவித்து உருவாக்கினார். இது தொடர்பாக நினைவு ஸ்தூபி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டு 49 ஆண்டுகள் நேற்றுடன் நிறைவடைந்தது. புதுக்கோட்டை மாவட்டம் உதயமான நாளான நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி கோர்ட்டு வளாகத்தில் உள்ள நினைவு ஸ்தூபிக்கு சமூக ஆர்வலர்கள், காங்கிரஸ் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அடுத்த ஆண்டு 50-வது ஆண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ள இடத்தில் செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. மேலும் ஸ்தூபியில் உள்ள கல்வெட்டுகளும் சேதமடைந்துள்ளது. இதனை சீரமைத்து முறையாக பராமரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments