வலைகள் சேதம் அடைந்ததால் நடுக்கடலில் இருதரப்பு மீனவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் மீன்வளத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மீனவர்கள் இடையே தகராறு
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர் காலனியை சேர்ந்த மீனவர்கள் வழக்கம்போல் நேற்று நாட்டுப்படகுகள் மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் 3 நாட்டிக்கல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்களும் அதே பகுதியில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.
விசைப்படகு மீனவர்கள் 5 நாட்டிக்கல் தொலைவிற்கு அப்பால் தான் மீன்பிடிக்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில் 3 நாட்டிக்கல் பகுதியில் மீன்பிடித்ததால் நாட்டுப்படகு மீனவர்களின் வலைகள் சேதம் அடைந்ததாக கூறி நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை
பின்னர் கரை திரும்பிய கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்களை நாட்டுப்படகு மீனவர்கள் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்னகுப்பன் மற்றும் கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு தலைமையிலான போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருதரப்பு மீனவர்களையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் இருதரப்பினரும் சமாதானமாக செல்வதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.