மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 312 மனுக்கள் பெறப்பட்டன

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். கூட்டத்தில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர். சித்தன்னவாசல் அருகே தனியார் நிறுவனம் கல் குவாரி அமைக்க அனுமதிக்கக்கூடாது என சமூக ஆர்வலர்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. கூட்டத்தில் மொத்தம் 312 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், பேரிடர் காலங்களில் பொதுமக்கள் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நாட்காட்டிகளை, அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments