அறந்தாங்கியில் நாளை (ஜன.28) தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அறந்தாங்கி வர்த்தக சங்கம் இணைந்து நடத்தும் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பதிவு / உரிமம் முகாம்!




அறந்தாங்கியில் நாளை (ஜன.28) தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அறந்தாங்கி வர்த்தக சங்கம் இணைந்து நடத்தும் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பதிவு / உரிமம் முகாம் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில்  தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அறந்தாங்கி வர்த்தக சங்கம் இணைந்து நடத்தும் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பதிவு / உரிமம் முகாம் நாளை 28.01.2023 (சனிக்கிழமை)
காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 வரை அறந்தாங்கி வர்த்தக சங்க கட்டிடத்தில்  நடைபெற உள்ளது.

அதுசமயம் உணவு பொருள் விற்பனை செய்யும் அனைவரும் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெறுவதுடன் தங்களின் கடைகளுக்கான உணவு பாதுகாப்பு பதிவு / உரிமம் புதிதாக விண்ணப்பித்தல் அல்லது புதுப்பித்தல் செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. வருடத்திற்கு விற்று கொள்முதல் 12 இலட்சம் வரை வியாபாரம் செய்பவர்கள் பதிவும், வருடத்திற்கு விற்றுகொள்முதல் 12 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் உரிமமம் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், மொத்த விற்பனையாளர், சில்லறை விற்பனையாளர் டீக்கடைகள், ஹோட்டல்கள், காய்கறி கடைகள், கோழி& மட்டன் கடைகள், மீன் கடைகள், பழக்கடைகள், தெருவோர வியாபாரிகள், ரைஸ் மில்கள், ஆயில் மில்கள், இருசக்கர வாகனங்களில் உணவு பொருட்களை கொண்டு சென்று கடையில் விற்பவர்கள், பேக்கரி, அரிசி ஆலைகள் (MRM) பாஸ்ட் புட் கடைகள். இரு சக்கர பால் வியாபாரிகள் போன்றோர் அடங்குவர். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்கள் : பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் ஜெராக்ஸ் உரிமம் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் : பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் ஜெராக்ஸ் நகராட்சி ரசீது, மின் இணைப்பு ரசீது

மேலும் விபரங்களுக்கு : அறந்தாங்கி உணவு பாதுகாப்பு அலுவலர் (94421 70580)


S.காமராஜ், தலைவர்-9842403895

V.தவசுமணி, செயலாளர்-9842363752

S.சேக் அப்துல்லா, பொருளாளர்-9443531373
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments