கட்டுமாவடி அருகே மீனவர் வலையில் சிக்கிய விஷப்பாம்பால் பரபரப்பு
கட்டுமாவடி அருகே செம்பியன்மகாதேவிப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் சிவக்குமார், தினேஷ். இவர்கள் இருவரும் பைபர் படகில் மீன்பிடித்து வருகின்றனர். நேற்று காலை மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது வலையில் அதிக விஷத்தன்மை கொண்ட 8 அடி நீளமுள்ள வாலடியான் பாம்பு சிக்கியது. உடனே அந்தப் பாம்பு அதிக ஆக்ரோஷத்துடனும், கடும் சீற்றத்துடனும் அங்கும், இங்குமாக ஓடியது. உடனே சுதாரித்துக் கொண்ட மீனவர்கள் அந்தப் பாம்பை அடித்து கொன்றனர். அந்த பாம்பு கடித்திருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். அதிக விஷத்த தன்மை வாய்ந்த பாம்புகளில் இதுவும் ஒன்றாகும். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், கடலில் இதுபோன்ற உயிருக்கு ஆபத்தான உயிரினங்கள் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. கடல் சொறி, உருமீன் மற்றும் விஷப்பாம்புகள் போன்றவை உயிருக்கு ஆபத்தானதாகவும், அதிக தீங்கு தரக்கூடியதாகவும் உள்ளது. இதுபோன்ற பல்வேறு ஆபத்துக்களை எதிர்க்கொண்டு நாங்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறோம் என்று கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments