மதுரையில் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணி; எந்தெந்த ரயில்கள் முழுவதும் ரத்து, எந்தெந்த ரயில்கள் பகுதியாக ரத்து எந்தெந்த ரயில்கள் மாற்றுப்பாதையில் செல்லும் முழு விவரம்
பயணிகளின் வசதிக்காக ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், புதிய ரயில் இயக்கவும் மதுரை ரயில் நிலையத்தில் இரட்டை இரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காலமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்: 

பிப்ரவரி 6 முதல் மார்ச் 6 வரை திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில் (16732), மதுரை - ராமேஸ்வரம் - மதுரை சிறப்பு ரயில்கள் (06651/06652, 06653/06654, 06655/06656), திண்டுக்கல் - மதுரை - திண்டுக்கல் சிறப்பு ரயில்கள் (06609/06610), பிப்ரவரி 7 முதல் மார்ச் 7 வரை பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில் (16731), பிப்ரவரி 15 முதல் மார்ச் 7 வரை தேனி மதுரை சிறப்பு ரயில் (06702), பிப்ரவரி 16 முதல் மார்ச் 7 வரை மதுரை - தேனி சிறப்பு ரயில் (06701), பிப்ரவரி 16 முதல் மார்ச் 6 வரை செங்கோட்டை - மதுரை சிறப்பு ரயில் (06664), செங்கோட்டை - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06648), திருநெல்வேலி - செங்கோட்டை சிறப்பு ரயில் (06687), பிப்ரவரி 17 முதல் மார்ச் 7 வரை மதுரை - செங்கோட்டை சிறப்பு ரயில் (06663),

பிப்ரவரி 16, 17, 19, 23, 24, 26 மார்க் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - திருப்பதி விரைவு ரயில் (16780) மற்றும் பிப்ரவரி 17, 18, 20, 24, 25, 27 மார்ச் 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருப்பதி - ராமேஸ்வரம் விரைவு ரயில் (16779), பிப்ரவரி 18, 25 மார்ச் 1, 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - கன்னியாகுமரி விரைவு ரயில் (22621) பிப்ரவரி 16, 23 மார்ச் 2, 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - ராமேஸ்வரம் விரைவு ரயில் (22622),

பிப்ரவரி 16, 17, 20, 21, 23, 24, 27, 28 மார்ச் 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை - காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் (12605), பிப்ரவரி 17, 18, 21, 22, 24, 25, 28 மார்ச் 1, 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய காரைக்குடி - சென்னை பல்லவன் விரைவு ரயில் (12606), பிப்ரவரி 16, 18, 23, 25 மார்ச் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை சென்னை மஹால் விரைவு ரயில் (22624), பிப்ரவரி 17, 19, 24, 26 மார்ச் 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை - மதுரை மஹால் விரைவு ரயில் (22623), பிப்ரவரி 22, 24, 27 மார்ச் 1, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மதுரை விரைவு ரயில் (20601), பிரபாகர் 23, 26, 28 மார்ச் 2, 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (20602), பிப்ரவரி 26-ல் புறப்பட வேண்டிய புதுச்சேரி - கன்னியாகுமரி விரைவு ரயில் (16861), பிப்ரவரி 27-ல் புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - புதுச்சேரி விரைவு ரயில் (16862), பிப்ரவரி 27, மார்ச் 1 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் ரயில் (22657), பிப்ரவரி 28 மார்ச் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - தாம்பரம் விரைவு ரயில் (22658), மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - கோயம்புத்தூர் விரைவு ரயில் (22667),

பிப்ரவரி 28, மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கோயம்புத்தூர் - நாகர்கோவில் விரைவு ரயில் (22628), மார்ச் 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில்கள் (22627/22628), மார்ச் 1, 2 ஆகிய நாட்கள் புறப்பட வேண்டிய பெங்களூரு - நாகர்கோவில் விரைவு ரயில் (17235), மார்ச் 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - பெங்களூரு விரைவு ரயில் (17236), மார்ச் 2 அன்று புறப்பட வேண்டிய சென்னை - நாகர்கோவில் விரைவு ரயில் (12667), மார்ச் 3 அன்று புறப்பட வேண்டிய நாகர்கோவில் - சென்னை விரைவு ரயில் (12668), மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்செந்தூர் - திருநெல்வேலி - திருச்செந்தூர் சிறப்பு ரயில்கள் (06405/06409), மார்ச் 5 அன்று புறப்பட வேண்டிய கோயம்புத்தூர் - மதுரை விரைவு ரயில் (16721), மார்ச் 6 அன்று புறப்பட வேண்டிய மதுரை - கோயம்புத்தூர் விரைவு ரயில் (16722), மார்ச் 5 அன்று புறப்பட வேண்டிய விழுப்புரம் - மதுரை விரைவு ரயில் (16867), மார்ச் 6 அன்று புறப்பட வேண்டிய மதுரை - விழுப்புரம் ரயில் (16868), மார்ச் 1, 2, 3, 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஈரோடு - திருநெல்வேலி விரைவு ரயில் (16845), மார்ச் 2, 3, 4, 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருநெல்வேலி - ஈரோடு விரைவு ரயில் (16846) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்: 

பிப்ரவரி 6 முதல் மார்ச் 6 வரை நாகர்கோவில் - கோயம்புத்தூர் - நாகர்கோவில் பகல் நேர விரைவு ரயில்கள் (16321/16322) விருதுநகர் - கோயம்புத்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பிப்ரவரி 10 முதல் மார்ச் 5 வரை சென்னை - மதுரை - சென்னை தேஜாஸ் அதிவிரைவு ரயில்கள் (22671/22672) திருச்சி - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பிப்ரவரி 6, 7, 8 மற்றும் பிப்ரவரி 16 முதல் மார்ச் 4 வரை புறப்பட வேண்டிய மதுரை - புனலூர் விரைவு ரயில் (16729) மற்றும் பிப்ரவரி 5, 6, 7 மற்றும் பிப்ரவரி 15 முதல் மார்ச் 3 வரை புறப்பட வேண்டிய புனலூர் - மதுரை விரைவு ரயில் (16730) ஆகியவை மதுரை - திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பிப்ரவரி 17 முதல் மார்ச் 3 வரை மதுரை - சென்னை வைகை விரைவு ரயில் (12636) மற்றும் பிப்ரவரி 16 முதல் மார்ச் 2 வரை சென்னை - மதுரை வைகை விரைவு ரயில் (12635) ஆகியவை கூடல் நகர் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பிப்ரவரி 16 முதல் மார்ச் 3 வரை மதுரை - சென்னை பாண்டியன் விரைவு ரயில் பிப்ரவரி 15 முதல் மார்ச் 2 வரை சென்னை - மதுரை பாண்டியன் விரைவு ரயில் (12637) ஆகியவை கூடல் நகர் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பிப்ரவரி 9, 16 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - பிகானீர் விரைவு ரயில் (22631), மதுரை கூடல் நகர் இடையேயும், பிப்ரவரி 23, மார்ச் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - பிகானீர் விரைவு ரயில் பிப்ரவரி 19, 26 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய பிகானீர் - மதுரை விரைவு ரயில் (22632) ஆகியவை மதுரை - திருச்சி இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பிப்ரவரி 10, 13, 17, 20, 24, 27 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சண்டிகர் - மதுரை விரைவு ரயில் (12688), பிப்ரவரி 12, 15, 19, 22, 26 மார்ச் 1 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - சண்டிகர் விரைவு ரயில் (12687) ஆகியவை ஈரோடு - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பிப்ரவரி 14, 16, 21, 23 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நிஜாமுதீன் - மதுரை சம்பர் கிரந்தி விரைவு ரயில் (12652) மற்றும் பிப்ரவரி 19, 21, 26, 28 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - நிஜாமுதீன் சம்பர்கிரந்தி விரைவு ரயில் (12651) ஆகியவை மதுரை - விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பிப்ரவரி 28 அன்று புறப்பட வேண்டிய நிஜாமுதீன் - மதுரை சம்பர்க் கிரந்தி விரைவு ரயில் திண்டுக்கல் வரை இயக்கப்படும். பிப்ரவரி 6 அன்று புறப்பட வேண்டிய புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மதுரை விரைவு ரயில் (20601) மற்றும் பிப்ரவரி 7 அன்று புறப்பட வேண்டிய மதுரை - புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் ஆகியவை மதுரை - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பிப்ரவரி 5, 6, 7 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா விரைவு ரயில் (16343) மற்றும் பிப்ரவரி 6, 7, 8 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் (16344) ஆகியவை மதுரை - கூடல் நகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பிப்ரவரி 8 முதல் 28 வரை மற்றும் மார்ச் 3, 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா விரைவு ரயில் (16343) மற்றும் பிப்ரவரி 9 முதல் மார்ச் 1 வரை மற்றும் மார்ச் 4, 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் (16344) ஆகியவை மதுரை - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பிப்ரவரி 11, 18, 25 மார்ச் 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கச்சகுடா - மதுரை விரைவு ரயில் (17615) மற்றும் பிப்ரவரி 12, 19, 26 மார்ச் 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - கச்சகுடா விரைவு ரயில் (17616) ஆகியவை திண்டுக்கல் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பிப்ரவரி 15 22 மார்ச் 1 ஆகிய நாட்களில் பரப்ப வேண்டிய மும்பை குர்லா - மதுரை விரைவு ரயில் (22101) மற்றும் பிப்ரவரி 17, 24 மார்ச் 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை - மும்பை குர்லா விரைவு ரயில் (22102) ஆகியவை விழுப்புரம் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் (16105) மற்றும் பிப்ரவரி 28 மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை - திருச்செந்தூர் செந்தூர் எக்ஸ்பிரஸ் (16105) ஆகியவை திருச்சி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பிப்ரவரி 6, 9 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருநெல்வேலி - மும்பை தாதர் விரைவு ரயில் (11022) திருநெல்வேலி - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து. பிப்ரவரி 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய இதே ரயில் திருநெல்வேலி - சேலம் இடையே பகுதியாக ரத்து. பிப்ரவரி 4, 7 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மும்பை தாதர் - திருநெல்வேலி விரைவு ரயில் (11021) திண்டுக்கல் - திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 28 மார்ச் 1 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய இதே ரயில் சேலம் - திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து. மார்ச் 1 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மைசூர் - தூத்துக்குடி விரைவு ரயில் (16236) மற்றும் மார்ச் 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய தூத்துக்குடி மைசூர் விரைவு ரயில் ( 16235) ஆகியவை திண்டுக்கல் - தூத்துக்குடி இடையே பகுதியாக ரத்து. பிப்ரவரி 14, 21, 28 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஓஹா - ராமேஸ்வரம் விரைவு ரயில் (16734) மற்றும் பிப்ரவரி 17, 24 மார்ச் 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - ஓஹா விரைவு ரயில் (16733) ஆகியவை சேலம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 12, 19, 26 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய பனாரஸ் - ராமேஸ்வரம் (22536), பிப்ரவரி 15, 22 மார்ச் 1 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - பனாரஸ் விரைவு ரயில் (22535), பிப்ரவரி 18, 25 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய அஜ்மீர் - ராமேஸ்வரம் ரயில் (20973) மற்றும் பிப்ரவரி 21, 28 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - அஜ்மீர் விரைவு ரயில் (20974) ஆகியவை விழுப்புரம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 13, 20, 27 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய காந்திதாம் - திருநெல்வேலி விரைவு ரயில் (20924) மற்றும் பிப்ரவரி 16, 23 மார்ச் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருநெல்வேலி - காந்தி தாம் விரைவு ரயில் (20923), பிப்ரவரி 17, 18, 24, 25 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஜாம்நகர் - திருநெல்வேலி ரயில் (19578), பிப்ரவரி 20, 21, 27, 28 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருநெல்வேலி - ஜாம்நகர் விரைவு ரயில் (19577) ஆகியவை திருவனந்தபுரம் - திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து. பிப்ரவரி 24, 25 மார்ச் 1 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை - செங்கோட்டை சிலம்பு ரயில் (20681) மற்றும் பிப்ரவரி 25, 26 மார்ச் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய செங்கோட்டை - சென்னை சிலம்பு ரயில் (20682) ஆகியவை காரைக்குடி - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து. மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் விரைவு ரயில் (20691) மற்றும் மார்ச் 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - தாம்பரம் விரைவு ரயில் (20692) ஆகியவை திருச்சி - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 6 அன்று பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில் (16731) மற்றும் மார்ச் 7 அன்று திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில் (16732) ஆகியவை திண்டுக்கல் - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து. பிப்ரவரி 6 முதல் மார்ச் 4 வரை கோயம்புத்தூர் - மதுரை விரைவு ரயில் (16721), விழுப்புரம் மதுரை விரைவு ரயில் (16867) மற்றும் பிப்ரவரி 7 முதல் மார்ச் 5 வரை மதுரை - கோயம்புத்தூர் ரயில் (16722), மதுரை - விழுப்புரம் ரயில் (16868) ஆகியவை திண்டுக்கல் மதுரை இடையே பகுதியாக ரத்து. மார்ச் 1, 2, 3 ஆகிய

நாட்களில் மயிலாடுதுறை - செங்கோட்டை ரயில் (16847) மற்றும் மார்ச் 2, 3, 4 ஆகிய நாட்களில் செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் ஆகியவை திருச்சி - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து. பிப்ரவரி 5 முதல் 15 வரை செங்கோட்டை - மதுரை ரயில் (06664), பிப்ரவரி 6 முதல் 16 வரை மதுரை - செங்கோட்டை ரயில் (06663), பிப்ரவரி 17 முதல் மார்ச் 6 வரை மதுரை - செங்கோட்டை ரயில் (06504), பிப்ரவரி 16 முதல் மார்ச் 5 வரை செங்கோட்டை - மதுரை ரயில் (06503) ஆகியவை மதுரை - விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் அருப்புக்கோட்டை மானாமதுரை காரைக்குடி புதுக்கோட்டை திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்கள்: 

பிப்ரவரி 6, 8, 11, 13, 15, 20, 22, 27 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - கன்னியாகுமரி ரயில் (22621), பிப்ரவரி 5, 7, 10, 12, 14, 19, 21, 26, 28 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - ராமேஸ்வரம் ரயில் (22622), பிப்ரவரி 23 முதல் 28 வரை மற்றும் மார்ச் 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்செந்தூர் - சென்னை செந்தூர் விரைவு ரயில் (16106), பிப்ரவரி 23 முதல் 27 வரை புறப்பட வேண்டிய சென்னை - திருச்செந்தூர் செந்தூர் விரைவு ரயில் (16105), பிப்ரவரி 24 அன்று புறப்பட வேண்டிய ஓஹா - தூத்துக்குடி ரயில் (19568) பிப்ரவரி 26 அன்று புறப்பட வேண்டிய தூத்துக்குடி - ஓஹா ரயில் (19567), பிப்ரவரி 6 முதல் மார்ச் 1 வரை மயிலாடுதுறை - செங்கோட்டை ரயில் (16847), மார்ச் 5, 6 ஆகிய நாட்களில் செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் (16848), பிப்ரவரி 5 முதல் மார்ச் 5 வரை புறப்பட வேண்டிய குருவாயூர் - சென்னை ரயில் (16128), மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை - குருவாயூர் ரயில் (16127), பிப்ரவரி 5, 9, 12, 16, 19, 23, 26 மார்ச் 2, 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - மும்பை ரயில் (16352), பிப்ரவரி 9 16 23 மார்ச் 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஜம்மு ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா - திருநெல்வேலி ரயில் (16788),

பிப்ரவரி 11, 18, 25 மார்ச் 4, 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - ஹௌரா ரயில் (12666), பிப்ரவரி 6, 7, 8, 10, 13, 14, 15, 17, 20, 21, 22, 24, 27, 28 மார்ச் 1, 3, 6 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - மும்பை ரயில் (16340), பிப்ரவரி 28 மார்ச் 1 ஆகிய நாட்கள் புறப்பட வேண்டிய மும்பை - நாகர்கோவில் ரயில் (16339(, பிப்ரவரி 11, 18, 25, மார்ச் 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - கச்சக்குடா ரயில் (16354), பிப்ரவரி 5, 12, 19, 26 மார்ச் 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கச்சக்குடா - நாகர்கோவில் ரயில் (16353), பிப்ரவரி 23 முதல் மார்ச் 2 வரை புறப்பட வேண்டிய சென்னை - செங்கோட்டை பொதிகை ரயில் (12661), பிப்ரவரி 23 முதல் மார்ச் 3 வரை புறப்பட வேண்டிய செங்கோட்டை - சென்னை பொதிகை ரயில் (12661), பிப்ரவரி 28 முதல் மார்ச் 3 வரை புறப்பட வேண்டிய திருநெல்வேலி - சென்னை நெல்லை விரைவு ரயில் (12631), மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை - திருநெல்வேலி நெல்லை விரைவு ரயில் (16232), பிப்யவரி 28, மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை கொல்லம் ரயில் (16101), பிப்ரவரி 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கொல்லம் - சென்னை ரயில் 16102), மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கொல்லம் - சென்னை அனந்தபுரி ரயில் (16824), மார்ச் 1 அன்று புறப்பட வேண்டிய திருநெல்வேலி - மும்பை தாதர் ரயில் (22630) ஆகியவை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments