திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாடு




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாடு திருச்சி சிறுகனூரில் பிப்ரவரி 05 காலை தொடங்கியது. மாநாட்டுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் சுலைமான் தலைமை தாங்கினார். காலையில் 9 மணிக்கு கண்காட்சி அரங்கம் திறக்கப்பட்டது. இதனை இஸ்லாமிய மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.இதை எடுத்து மாநில நிர்வாகிகள் தொடக்க உரையாற்றினர். மாநாட்டில் மாநில செயலாளர் இம்ரான் உருது உரையும், மாநிலச் செயலாளர் அமீன் ஆங்கில உரையும் நிகழ்த்தினர். இந்த மாநாட்டில் மதரசா மாணவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்ச்சி மற்றும் பட்டிமன்றம் நடக்கிறது .பித்அத்உருவாக பெரிதும் காரணம் ஆலிம்களா? மக்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம், மேலாண்மை குழு தலைவர்சம்சுல் லுஹா ரஹ்மானி,பேச்சாளர் சுலைமான் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். 

இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து தவ்ஹீத் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பல்வேறு தலைப்புகளில் ஜமாத்தின் முன்னணி தலைவர்கள், மார்க்க அறிஞர்கள் சிறப்பு ரையா ற்றுகின்றனர். மத்திய அரசினாலும், பல அமை ப்புகளாலும் இஸ்லா மியர்கள் படும் நெருக்கடிகள் குறித்தும், தீர்வு காணும் வகையிலும் மக்களிடம் விளக்கி வ மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments