வட்டாட்சியர் அலுவலகங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கான குறைதீர்க்கும் முகாம் நாளை(11-02-2023) நடக்கிறது




பொது வினியோகத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும், 2023-ம் ஆண்டு பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடும்ப அட்டைகள், நியாயவிலைக் கடை தொடர்பான குறைகள் தீர்க்கும் முகாம் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் தொடர்புடைய தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள், குறிப்பாக குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம் ஆகிய சேவைகளை வேண்டி முகாமில் கோரிக்கையினை அளிக்கலாம். பொதுமக்கள் மற்றும் அட்டைதாரர்கள் சார்பாக நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடர்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் படி மேற்கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments