முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் தொடங்கியது
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை, மாவட்ட கலெக்டர் கவிதாராமு தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வாலிபால், கூடைப்பந்து, சிலம்பம், இறகுப்பந்து, நீச்சல், மேசைப்பந்து, வளைகோல்பந்து, கால்பந்து, கபடி, தடகளம், கிரிக்கெட் போட்டிகளும், பொதுப் பிரிவினருக்கு வாலிபால், தடகளம், சிலம்பம், இறகுபந்து, கபடி, கிரிக்கெட், செஸ், கையுந்துப்பந்து போட்டிகளும், அரசு ஊழியர்களுக்கு கபடி, செஸ், தடகளம், கையுந்துப்பந்து, இறகுபந்து போட்டிகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீட்டர், 100 மீட்டர் ஓட்டம், இறகுபந்து, அடாப்டட் வாலிபால், எறிபந்து, கபடி போட்டிகளும் நடைபெற்றன.

 நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிகள் நேற்று தொடங்கி வருகிற 27-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து மண்டல மற்றும் மாநில அளவிலும் பங்கேற்க உள்ளனர் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments