சட்ட விதிமுறைகளை மீறியதாக ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம் மயிலாடுதுறை கலெக்டர் அதிரடி உத்தரவு




மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்து முன்னாள் மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்

இதுதொடர்பாக முன்னாள் ஆட்சியர் லலிதா அனுப்பி உள்ள உத்தரவு கடிதத்தில் 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205(1அ) மற்றும் 205(11) இன் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி  மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம், ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் என்பவர் ஊராட்சி சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளது தொடர்பாக அவர் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், குற்றச்சாட்டுகளுக்கு அவரால் அளிக்கப்பட்ட விளக்கங்கள் மற்றும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஊராட்சி மன்றத்தின் உறுப்பினர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை நன்கு பரிசீலனை செய்து ஆணைக்காரன் சத்திரம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் என்பவரை ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிக்கை வெளியிடப்படுகிறது. 

இந்த அறிக்கை 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட பிரிவு 262 (1)ன் படி தமிழ்நாடு அரசு இதழில் வெளியிடப்படும் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தம் பதவி நீக்க ஆணையை கனகராஜிடம் நேரில் சென்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வழங்கினார்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments