புதுக்கோட்டை விவசாய சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் பட்ஜெட் நகலை எரித்து போராட்டம்
மத்திய அரசின் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து, புதுக்கோட்டையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது மத்திய நிதிநிலை அறிக்கையின் நகலை எரித்தனா். இப்போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் எம். சின்னதுரை எம்எல்ஏ தலைமை வகித்தாா். போராட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ. ராமையன், தலைவா் எஸ். பொன்னுச்சாமி, விதொச மாவட்டச் செயலா் டி. சலோமி, பொருளாளா் கே. சண்முகம், விதொச மாவட்டப் பொருளாளா் எம். பாலசுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போராட்டத்தில், பேசிய சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை முழுக்க, முழுக்க மக்கள் விரோதமான அறிக்கையாக உள்ளது என்றாா் அவா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments