ஆவுடையார்கோவில் பகுதியில் மழை நீரில் சேதமான நெற்பயிர்கள் கணக்கெடுப்பு பணி குறித்த கூட்டம்
ஆவுடையார்கோவில் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி நாசமானது. இதையடுத்து மழைநீரில் நாசமான நெற்பயிர்கள் கணக்கெடுப்பு பணி குறித்த ஆலோசனை கூட்டம் அறந்தாங்கி கோட்டாட்சியர் சொர்ணராஜ் தலைமையில் நடைபெற்றது. தாசில்தார் வில்லியம் மோசஸ், வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments