அறந்தாங்கி அருகே அழியாநிலை மற்றும் திருமயம் துளையானூரிலும் ரூ. 47.10 கோடியில் 2 நெல் சேமிப்பு முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.




புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 இடங்களில் ரூ. 4.10 கோடியில் கட்டப்பட்ட நெல் சேமிப்புத் தளங்களை மாநில முதல்வா் ஸ்டாலின் சனிக்கிழமை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் அழியாநிலையில் 40 ஆயிரம் டன் நெல்லைப் பாதுகாத்து வைக்கவும், திருமயம் வட்டம் துளையானூரில் 12 ஆயிரம் டன் நெல்லைப் பாதுகாத்து வைக்கவும் கான்கிரீட் தளம், மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்புத் தளங்கள் மொத்தம் ரூ. 4.10 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன.

அழியாநிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளா் எம். சீதாராமன், மாவட்ட வழங்கல் அலுவலா் ஆா். கணேசன், துணை மேலாளா்(தரக்கட்டுப்பாடு) பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments