மணமேல்குடி ஒன்றியத்தில் மூன்று மையங்களில் குறுவளமையப் பயிற்சி நடைபெற்றது.
    புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட  கட்டுமாவடி அரசு மேல்நிலைப்பள்ளி, அம்மா பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி பெண்கள் மற்றும் கோட்டைப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி பெண்கள் ஆகிய மூன்று குறுவள மையங்களில்  இணைப்புப் பாடப் நூல்  மற்றும் மதிப்பீட்டு பயிற்சி  நடைபெற்றது.

இப்பியிற்சியில் பாட இணைச் செயல்பாடுகளில் வார்த்தைகள் அறிதல் , மொழித் திறன் உச்சரிப்பு வெளிப்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் குறித்த விளக்கங்கள் பயிற்சியில் வழங்கப்பட்டது. 

 இப்பயிற்சியினை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் திரு கோபாலகிருஷ்ணன்,  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு செந்தில் குமார், மணமேல்குடி வட்டாரக் கல்வி அலுவலர் அவர்கள் திரு.செழியன்  திருமதி இந்திராணி மற்றும் மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆகியோர் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்கள். 

இப் பயிற்சியில் கருத்தாளர்களாக இனிய முனியன் எழில் மணி கோவிந்தராஜ் சசிகுமார் ஜான் பீட்டர் மற்றும் தேவராஜ் ஆகியோர் செயல்பட்டனர்.

இப்பயிற்சியில் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன் வேலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments