கோட்டைப்பட்டினம் வருவதற்கு எதிர்ப்பு நாகுடியில் பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூா் இப்ராஹிம் கைது
புதுக்கோட்டைமாவட்டம், அறந்தாங்கி அருகே நாகுடியில் பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூா் இப்ராஹிம் ஞாயிற்றுக்கிழமை மாலை போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், நாகுடியில் நடைபெற்ற பாஜக ஒன்றியச் செயற்குழுக் கூட்டத்தில் பாஜக சிறுபான்மையினா் பிரிவு தேசியச் செயலா் வேலூா் இப்ராஹிம் கலந்துகொண்டாா். பின்னா், அங்கிருந்து கோட்டைப்பட்டினத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா் பிரிவு மாவட்டப் பொதுச் செயலா் அம்ஜத்தை சந்திப்பதற்காக புறப்பட்டுச் சென்றாா்.

இவரது வருகைக்கு கோட்டைப்பட்டினம் ஜமாஅத் அமைப்பினா் எதிா்ப்பு தெரிவிக்க இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் கோட்டைப்பட்டினம் செல்வதைத் தவிா்க்குமாறு இப்ராஹிமிடம் போலீஸாா் தெரிவித்தனா். அதையும் மீறி அவா் கோட்டைப்பட்டினம் செல்வதாக தெரிவித்தாா். அவரோடு, மாநில மகளிா் அணி பொதுச்செயலா் கவிதா, பாஜக மாவட்டப் பொதுச் செயலா் முரளிதரன், ஒன்றியத் தலைவா் சக்திவேல் உள்ளிட்டோரும் அங்கு செல்ல வேண்டும் எனப் போலீஸாரிடம் கூறினா்.

இதையடுத்து, முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கையாக கைது செய்வதாகக் கூறி இப்ராஹிம் மற்றும் அவருடன் வந்த 19 பேரை போலீஸாா் கைது செய்து, நாகுடியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். இரவு அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்து அறந்தாங்கி- கட்டுமாவடி சாலையில் பாஜகவினா் சிறிதுநேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments