கீரனூருக்குள் பஸ்கள் வராததை கண்டித்து பொதுமக்கள் மறியல்




திருச்சி, புதுக்கோட்டை செல்லும் அரசு பஸ்கள் கீரனூருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக செல்கிறது. இரவு நேரங்களில் கீரனூருக்குள் பஸ்கள் வருவதில்லை. மேலும் கீரனூர் பயணிகள் பஸ் புறப்படும் கடைசி நேரத்தில் தான் பஸ்சில் ஏறிக்கொள்ள வேண்டும் என்றும் டிரைவர், கண்டக்டர்கள் கூறுகின்றனர். இதனை கண்டித்தும், மேலப்புதுவயல் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரியும் பொதுமக்கள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் குளத்தூர் தாசில்தார் சக்திவேல் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

சாலை மறியல்

அப்போது திருச்சி, புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் கீரனூருக்குள் செல்லும் பஸ்களின் வழித்தடங்களின் எண்கள் குறிப்பிட்டு விளம்பர பதாகை வைக்கப்படும். துவரவயல் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் உடனடியாக அமைக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் இதுநாள் வரையும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் சார்பில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பாலா தலைமையில் திருச்சி-புதுக்கோட்டை புறவழிச்சாலை பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

கைது

இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 36 பேர் மீது வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments