புதுக்கோட்டை மாவட்டத்தில் குடற்புழு நீக்க மருத்துவ முகாம் இன்று நடக்கிறது
தமிழ்நாடு முழுவதும் இன்று (செவ்வாய்) தேசிய குடற்புழு நீக்க மருந்து வழங்கும் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 1-19 வயதுடைய 5,23,811 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதுடைய 1,27,870 மகளிருக்கும் என மொத்தமாக 6,51,681 பேருக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கப்படவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு, தனியார் கல்லூரிகளில், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் ஆகியோர் மேற்பார்வையில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. 

பள்ளி செல்லாத சிறார்களுக்கும், 20 வயது முதல் 30 வயதுடைய மகளிருக்கும் (கர்ப்பிணிகள், பிரசவித்த தாய்மார்கள் நீங்கலாக) அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்களில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. விடுபட்டுள்ள குழந்தைகளுக்கு பிப்ரவரி 21-ந் தேதி வழங்கப்பட உள்ளது. 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரையும் (200 மி.கி.), 2 முதல் 19 வயது உள்ள குழந்தைகள் மற்றும் 20-30 வயது வரை உள்ள மகளிருக்கு ஒரு மாத்திரையும் (400 மி.கி.) வழங்கப்படும். 

குடற்குழு நீக்க மாத்திரைகள், ரத்த சோகையினைக் குறைத்து குழந்தையின் ஊட்டச்சத்து நிலையில் முன்னேற்றம் உருவாகிறது. குழந்தைகள் வளர்ச்சியும், ஆரோக்கியமும் நன்றாகவும் பள்ளி வருகையில் முன்னேற்றமும் இருக்கும் என்பதால் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தகுதியுடைய அனைவரும் இம் மாத்திரையினை உட்கொண்டு நல் ஆரோக்கியத்தினை பெற்றிடும்படி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments