பாசிப்பட்டினத்தில் பாய்மர படகு போட்டி கடலில் சீறிப்பாய்ந்து சென்ற பாய்மர படகுகள் ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர்




பாசிப்பட்டினத்தில் கோவில் விழாவையொட்டி கடலில் சீறிப்பாய்ந்து பாய்மர படகுகள் சென்றன. இதை ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர்.

பாய்மர படகு போட்டி

திருவாடானை தாலுகா பாசிப்பட்டினத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி தி.மு.க. சார்பில் பாய்மர படகு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 36 படகுகள் கலந்து கொண்டன. காற்றின் வேகத்திற்கு ஏற்றார் போல் ஒரு படகுக்கு ஆறு பேர் வீதம் படகுகளை இயக்கினர்.

இதில் முதல் பரிசை தொண்டி புதுக்குடி ஏழுமுக காளி, ஏழு லெட்சுமி, 2-வது பரிசை வடக்கு புதுக்குடி குகா, தனுஸ்ரீ, 3-ம் பரிசை திருப்பாலைக்குடி முனியய்யா, குகாஸ்ரீ, 4-ம் பரிசு நம்புதாளை கருப்பையா, கார்மேகம், 5-ம் பரிசை முள்ளிமுனை சமயராஜா ஆகியோரது படகுகள் பெற்றன.

ஆயிரக்கணக்கானோர் ரசித்தனர்

நிகழ்ச்சியில் திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார், திருவாடானை தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ஒடவயல் ராஜாராம், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் முத்துமனோகரன், ஒன்றிய துணைச்செயலாளர் அன்வர் சதாத், மாவட்ட பிரதிநிதி அமீர்கான், கலிய நகரி ஊராட்சி தலைவர் உம்முசலீமா நூருல் அமீன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போட்டியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். கடலில் பாய்மர படகுகள் சீறி பாய்ந்து சென்றதை பார்த்த பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments