ஆவுடையார்கோவில் அரசு பள்ளியில் தொழுநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு




ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொழுநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் குடற்புழு நீக்க முகாம் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார். பொன்பேத்தி வட்டார மருத்துவ அலுவலர் பிரியதர்ஷினி கலந்து கொண்டு தொழுநோய் தடுப்பு சார்ந்த விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடையே கலந்துரையாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தொடர்ந்து மாணவர்களிடையே தொழுநோய் சார்ந்த வினாக்களுக்கு சிறப்பாக பதிலளித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு குடற்புழு நீக்கம் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி அனைத்து மாணவர்களுக்கும் மாத்திரை வழங்கப்பட்டது. இதில் உதவி தலைமை ஆசிரியர் ஸ்டாலின், விலங்கியல் ஆசிரியை புவனேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments