பொன்னமராவதி அருகே வேகத்தடைக்கு வர்ணம் பூசிய இளைஞர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அம்மன் குறிச்சியிலிருந்து மறவாமதுரைக்கு செல்லும் சாலை சமீபத்தில் போடப்பட்டது. இந்த சாலையை அமைத்த ஒப்பந்ததாரர் வேகத்தடைக்கு முன்எச்சரிக்கை பலகை வைக்காமலும், வேகத்தடைக்கு வர்ணம் பூசாமல் கிடப்பில் போட்டுள்ளார். இதனால் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற பலரும் வேகத்தடை இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்தில் சிக்கினர். அவ்வாறு விபத்து ஏற்படுவதை உணர்ந்த அப்பகுதி இளைஞர்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் இளைஞர்கள் தாங்களே முன்வந்து வேகத்தடைகு முன் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்ததோடு, வேகத்தடைக்கும் வெள்ளை நிற வர்ணம் பூசினர். மேலும் அம்மன்குறிச்சியிலிருந்து சொக்கநாதபட்டி பிரிவு சாலை மற்றும் சொக்கநாதபட்டி ஊர் நுழையும் முன்பு ஊரின் பெயர் பலகை வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments