புதுக்கோட்டை - தஞ்சாவூர் புதிய ரயில் பாதை கோரி கந்தா்வகோட்டை எம்எல்ஏ கடிதம்
புதுக்கோட்டை - தஞ்சாவூர் புதிய ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற கோரி சென்னை தென்னக ரயில்வே பொது மேலாளருக்கும் & திருச்சி கோட்ட மேலாளருக்கும் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர்  திரு.மா.சின்னதுரை கோரிக்கை

கவனம்பெறும் புதுக்கோட்டை - தஞ்சை புதிய ரயில் பாதை திட்டம்!

கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் 
திரு.மா.சின்னதுரை அவர்கள் புதுக்கோட்டை மக்களின் 100 ஆண்டு கனவு திட்டமான புதுக்கோட்டை - தஞ்சாவூர் வழி கந்தர்வகோட்டை(65கிமீ) புதிய ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற தென்னக ரயில்வே பொது மேலாளருக்கும் & திருச்சி கோட்ட மேலாளருக்கும் கந்தர்வகோட்டை பகுதி மக்களுக்கு இந்த திட்டம் ஏன் தேவை என்பதையும் தெளிவாக விளக்கி கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 

புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நூற்றாண்டுக் கனவுத் திட்டமாக இருக்கும் புதுக்கோட்டை- தஞ்சாவூர் ரயில் தடம் அமைக்கும் திட்டத்தை மத்திய ரயில்வே துறை நிறைவேற்றித் தர வேண்டும் என கந்தர்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதி மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், எனது தொகுதிக்குள்பட்ட மக்களுக்கு ஒரு ரயில் நிலையம் கிடைக்கும். அதன் மூலம் இந்த வழியாகச் செல்லும் ரயில்களில் எளிதில் பயணித்து புதுக்கோட்டைக்கும், தஞ்சாவூருக்கும் செல்லும் வாய்ப்பு இப்பகுதி மக்களுக்கு கிடைக்கும். இதன் மூலம் தினமும் தஞ்சாவூருக்கும், வேலைக்கு வந்து செல்லும் சாதாரண கூலித் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.

புதுக்கோட்டையிலிருந்து திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு சுற்றி செல்ல வேண்டியது இல்லாமல் பயண நேரமும் குறையும்.

இந்தப் பகுதியிலுள்ள விவசாய விளை பொருட்களை வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லும் வசதியும் கிடைக்கும். மேலும், இணைப்பு ரயில்கள் மூலம் வெளியூர்களுக்கும் சென்று வருவதற்கு கந்தர்வகோட்டை தொகுதி மக்கள் பயன்பெறுவார்கள். எனவே, புதுக்கோட்டை- தஞ்சை ரயில்பாதைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட மத்திய ரயில்வே துறைக்கு உரிய முன்மொழிகளை அனுப்பி, நிதி பெற்று, விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments