கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தமிழக அரசு நிவாரண உதவித்தொகை வழங்குகிறது. இந்த உதவித்தொகையான ரூ.3 லட்சத்தை பெற இதுவரை விண்ணப்பிக்காத நபர்கள் உரிய ஆவணங்களுடன் கடைசி வாய்ப்பாக இம்மாதம் 22-ந் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, முன்னாள் படைவீரர் நல அலுவலக வளாகம், கல்யாணராமபுரம் 1-ம் வீதி, திருக்கோகர்ணம் அஞ்சல், புதுக்கோட்டை-2 என்ற முகவரிக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 6369031924, 04322-221266 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்   தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments