அடிப்படை வசதிகளை செய்துதர மறுக்கும் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டி வருகிற மார்ச்.15-ஆம் தேதி மாபெரும் சாலை மறியல் போராட்டம்!அடிப்படை வசதிகளை செய்துதர மறுக்கும் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டி மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஆர்.புதுப்பட்டினத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர மறுக்கும் ஊராட்சி நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டி வருகிற 15.03.2023 புதன்கிழமை காலை 11.00 மணியளவில் மீமிசல் கிழக்கு கடற்கரை சாலை செக்போஸ்ட் அருகில், R.புதுப்பட்டினம் நுழைவு சாலையில் ஜமாத் தலைவர் பிரியம்.காதர் தலைமையில் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. 

கீழ்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
 • ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட R.புதுப்பட்டினம் கிராமத்தில் பள்ளிக்கூடம், அங்கன்வாடி, மயானக் கரை மற்றும் பெண்கள் குளம் ஆகிய பகுதிகளில் மலை போல் தேங்கி கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த மறுக்கும் ஊராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை வேண்டியும்
 • Commission, Corruption, Collection என கல்லா கட்டும் நாட்டாணி புரசக்குடி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் 
 • ஊழலின் மையமாக திகழும் நாட்டாணி புரசக்குடி ஊராட்சி நிர்வாகத்திற்கு துணை போகும் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்தும்
 • R.புதுப்பட்டினம் முஸ்லீம் தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்க 2021 - 2022ம் ஆண்டு நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 15-வது நிதிக்குழு நிதியை முறைகேடு செய்து, R. புதுப்பட்டினம் முஸ்லீம் தெருவில் கால்வாய் அமைக்க மறுக்கும் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்தும்
 • மீமிசல் செக்போஸ்ட் முதல் R.புதுப்பட்டினம் ஊருக்குள் செல்லும் பிரதான சாலையை சரி செய்து புதிய தார்சாலையாக அமைத்துத் தர வேண்டியும்
 • R.புதுப்பட்டினம் பெண்கள் மதரஸா வீதியில் உள்ள வடக்கு தெரு சாலையில் மீதமுள்ள பகுதிகளுக்கும் சாலை வசதி செய்துதர வேண்டியும்
 • பழுதடைந்த மின்கம்பங்ளை மாற்றியும், இருள் சூழ்ந்து இருக்கும் R.புதுப்பட்டினத்திற்கு தெருவிளக்குகள் உடனடியாக அமைத்துத் தர வேண்டியும்
 • ஒரு வருடத்திற்கு மேலாக R.புதுப்பட்டினம் தர்கா அருகில் உள்ள உயர் மின் கோபுரத்தின் பழுதடைந்த மின் விளக்கினை சரி செய்யாமல் அலட்சியமாக செயல்படும் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும்
 • R.புதுப்பட்டினம் கிராமத்திற்கு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வாய்ப்பை ஏற்படுத்தாமல் கிராமத்தையே புறக்கணிக்கும் ஊராட்சியை கண்டித்தும்
 • முகமதியர் மயானத்திற்கும் புதிய சாலை வசதி ஏற்படுத்த பலமுறை கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாத ஊராட்சியை கண்டித்தும்
 • ஊராட்சி நிர்வாகத்தில் தொடர்ந்து தலையீடு செய்து கமிஷன் பெற்று வரும் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும்.

தொடர்புக்கு: 6369109590, 9842431553, 7708320025

தகவல்: சேக் தாவூத், ஆர்.புதுப்பட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments