தென்னிந்தியாவில் முதல் முறை…பெங்களூரு-ஓசூர் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்..




பெங்களூரு-ஓசூர் மெட்ரோவிற்கான சாத்தியக்கூறு ஆய்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தென்னிந்தியாவில் முதல் இரு  மாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ இணைப்புக்கான சாத்தியக்கூறு மதிப்பீடு ஆகும்.

பொம்மசந்திரா – ஓசூர் :

பெங்களூரில் உள்ள பொம்மசந்திராவில் இருந்து தமிழ்நாட்டின் தொழில்துறை பகுதியான ஓசூர் வரை, ஏற்கனவே சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பதற்கான தனது முன் முயற்சியை தமிழ்நாடு அரசு  எடுத்திருந்தது.

பெங்களூரு மற்றும் ஓசூர் இடையே மெட்ரோ இணைப்பை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வுசெய்வதற்காக அனுமதி கோரி மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்(CMRL) கோரிக்கை விடுத்ததின் விளைவாக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழக அரசு உறுதி :

இந்த மெட்ரோ ரயில் திட்டமிடப்பட்டப் பாதையானது 20.5 கிமீ நீளமாகவும், கர்நாடகாவில் 11.7 கிமீ மற்றும் மீதமுள்ள 8.8 கிமீ தமிழ்நாட்டில் அமையக்கூடும். சாத்தியக்கூறு ஆய்வுக்கான கட்டணத்தை தமிழக அரசு முழுமையாக செலுத்தும் என்று ஏற்கனவே உறுதி அளித்திருந்தது. ஆனால் மெட்ரோ நெட்வொர்க் எவ்வாறு செலுத்தப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இந்த இரு மாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேறினால் தமிழ்நாடு அரசாங்கத்தின் கூற்றுப்படி, ஓசூர் மற்றும் பெங்களூரு இடையே மெட்ரோ இணைப்பு, 2,000 க்கும் மேற்பட்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மேலும் ஊக்குவிக்கும்.

கர்நாடக அரசு ஆதரவு:

கர்நாடக அரசு 2022 ஆம் ஆண்டில் MoHUA க்கு கடிதம் எழுதியிருந்தது, அதில் இந்த திட்டத்திற்கு தனது முழு ஆதரவை அளிக்கும் என்றும் இது இலட்சக்கணக்கான மக்கள் ஓசூர் மற்றும் பெங்களூர் இடையே பயணிப்பதை எளிதாக்கும் என்று தெரிவித்திருந்தது.

கனவு திட்டம் :
பின்னர் தமிழக அரசு சிஎம்ஆர்எல் நிறுவனத்திடம் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளுமாறு கோரியதோடு, அதற்காக ரூ.75 லட்சத்துக்கு ஒப்புதல் அளித்தது. தற்போது பொம்மசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஓசூர் வரை புதிய பாதை அமைக்கப்படுவதற்கான ஆய்வுகள் தொடங்கப்பட உள்ளது.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், தென்னிந்தியாவில் முதல் முறையாக இரு மாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ இணைப்பு இதுவாக இருக்கும். லோக்சபாவில் மெட்ரோ ரயில் இணைப்பை எழுப்பிய கிருஷ்ணகிரி எம்.பி., டாக்டர். ஏ.செல்லக்குமார், ஓசூரில் இருந்து பெங்களூரு செல்லும் ஆயிரக்கணக்கான வழக்கமான பயணிகளின் கனவு திட்டமாக இது அமையும் என்று குறிப்பிட்டிருந்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments