மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத தன்னார்வலர்களுக்கு வாழ்வில் திறன் பயிற்சி நடைபெற்றது.




புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதிய பாரத தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சியினை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்புக்குரிய திருமதி இந்திராணி அவர்களின் தலைமையில் தொடங்கியது.

மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்கள் முன்னிலை வகித்தார்.

இப்ப பயிற்சியில் சிறப்பு அழைப்பாளராக புதுக்கோட்டை மாவட்ட கவுன்சிலர் மதிப்புக்குரிய  திரு நஜீம் முதீன் அவர்கள் கலந்துகொண்டு தொழில் முனைவோர் தலைப்பில் வாழ்வியல் திறன் சார்ந்த கருத்துகளையும். பள்ளிகளின் கட்டமைப்புகள் குறித்தும் தேவைப்படும் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது பற்றியும் மற்றும் மாணவர்களிடத்தில் அடிப்படை கல்வியை வழங்கும் விதம் குறித்தும் தங்களுடைய அனுபவங்களை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மதிப்புக்குரிய டாக்டர் கோமதி அவர்கள் 
பெண் சுகாதாரம் குறித்தும் குழந்தைகள் வளர்ப்பு குறித்தும் மருத்துவத் துறையில் உள்ள காப்பீட்டு திட்டம் குறித்த விளக்கமும் மற்றும் மருத்துவத் துறையில் உள்ள பிரிவுகள் குறித்தும் விரிவான விளக்கம் பயிற்சியில் வழங்கினார். 

பயிற்சியில் 36 தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன் வேல்சாமி அங்கையர் கண்ணி இளம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு கண்ணன் சிறப்பு ஆசிரியர் கோவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments