அரசு சலுகைகளை பெற கிராம நிர்வாக அதிகாரியுடன் SPP சமூக ஆர்வலர்கள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு!



அரசு சலுகைகளை பெற கிராம நிர்வாக அதிகாரியுடன் SPP சமூக ஆர்வலர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் அரசு சலுகைகளான முதியோர் உதவித்தொகை, கைம்பெண் உதவித்தொகை, மகளிர் உதவிகள் போன்ற உதவிபெறும் தகுதியுடைய நபர்களை சந்தித்து  உதவி பெறுவதற்காக சமூக ஆர்வலர்கள் சங்கத்தின் சார்பாக  தேவையான ஆவணங்களை சரிபார்த்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் வழங்கி  அவர்களுக்கு சலுகைகள் பெறுவதற்கு  ஏற்பாடு செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ் அவர்களை சந்தித்து சமூக ஆர்வலர்களின் சங்கத்தின் சேவைகள் குறித்து பேசப்பட்டது. மேலும் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது.

இந்த சந்திப்பில் மூலம் அரசு சலுகைகளை பெற தகுதியுடையோரின் ஆவணங்கள் சரிபார்த்து தாமதமின்றி ஒப்புதல் வழங்குவதாக கூறினார்.

இந்த சந்திப்பில் சங்கத்தலைவர் ஜலால், துனைத் தலைவர் ஹபிப் முகமது, ஒருங்கினைப்பாளர் முஜிபு ரஹ்மான், சிறப்பு ஆலோசகர் சகுபர் அலி மற்றும் செய்தி தொடர்பாளர் சாதிக் ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்: சாதிக்-செய்தி தொடர்பாளர், SPP சமூக ஆர்வலர்கள் குழு, எஸ்.பி.பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments