அமைதி கடலான கோபாலப்பட்டிணம்‌ கடற்கரையில் ஆக்ரோஷமாய் எழும் அலைகள்.!!
அமைதி கடலான கோபாலப்பட்டிணம்‌ கடற்கரையில் ஆக்ரோஷமாய் அலைகள் காட்சியளிக்கிறது.

இலங்கை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் உள்ள கோடியக்கரை முதல் இராமேஸ்வரம் வரை உள்ள பாக்ஜலசந்தி கடற்கரையில் அலைகள் அதிமாக எழாது. கடல் அமைதியாக தான் எப்போதும் இருக்கும். 2004-ஆம் ஆண்டு சுனாமி வந்து போதும் கூட இந்த கடல் பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் கடற்கரையில் அலைகள் அதிகமாக எழும்பாது. இந்நிலையில் அமைதியாக இருக்கும் இந்த கடல் கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதோடு கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழுகிறது. இதனால் கோபாலப்பட்டிணம் மக்கள் கடற்கரையை ஆச்சிரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

மேலும் கடற்கரை அலைகள் மக்கள் புகைப்படங்கள் & வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

வீடியோ 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments