இந்தியாவில் இந்த மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்பு - இந்திய வானிலை மையம் கணிப்பு.
கோடைகாலம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது வாட்டி வதைக்கும் கடுமையான வெயில் தான். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே மாதங்களில் கோடைகாலத்தின் தாக்கம் இருக்கும். அதிலும் மக்கள்தொகை நிறைந்து எப்போதும் பரபரப்பாக சாலைகளில் இயங்கிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் நிறைந்த இடங்களில் கோடை காலத்தின் தாக்கம் ஆக்ரோஷமாய் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
இந்தியாவில் 1901ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கோடை காலம் முன்கூட்டியே தொடங்கியுள்ளதாகவும் இந்தியாவில் இந்த மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில், வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை உயர்ந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. வெப்பத்தால் ஏற்படும் உடல் பாதிப்பு குறித்து தினசரி கண்காணிப்பை, அனைத்து மாநிலங்களும் மேற்கொள்ள வேண்டும் என்றும் வெப்பத்தால் ஏற்படும் தாக்கங்கள், வெப்ப அலையால் ஏற்படும் நோய்களை எதிர்கொள்ள ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
1901க்குப் பிறகு 2006 பிப்ரவரியில் 29.31°செல்சியஸ் மற்றும் 2016 பிப்ரவரியில் 29.48°செல்சியஸ் பதிவானதே இதற்குமுன் பதிவான அதிகபட்ச சராசரி வெப்பநிலையாக இருந்திருக்கிறது.
சென்னை: அக்னி நட்சத்திர காலம் தொடங்கி விட்டதைப்போல கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த 146 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெப்பம் அதிகளவு காணப்பட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 1901ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பிற்பாதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கும். ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் சுட்டெரிக்கும். பின்னர் ஜூன் மாதம் பிற்பாதியில் இருந்து மெல்ல மெல்ல குறையத் தொடங்கும்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டது. . ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெயில் இப்போதே 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகி வருகிறது. வெப்ப அலைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள இப்போது இருந்தே பொதுமக்கள் தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய், பழரசம், குளிர்பானம் உள்ளிட்டவற்றை நாட தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் 1877ம் ஆண்டுக்கு பிறகு இந்த வருடம் பிப்ரவரி மாதம் வெப்பம் அதிகமாக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், சராசரி வெப்பநிலை 27.8 டிகிரி செல்சியஸ் என இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பிப்ரவரி மாதம் பதிவான வெப்பநிலை 29.54 டிகிரி செல்சியஸாக உள்ளது. இதுவே இதுவரை இருந்த பிப்ரவரி வெப்பநிலையில் அதிகபட்சமாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1901க்குப் பிறகு 2006 பிப்ரவரியில் 29.31°C மற்றும் 2016 பிப்ரவரியில் 29.48°C பதிவானதே இதற்குமுன் பதிவான அதிகபட்ச சராசரி வெப்பநிலையாக இருந்திருக்கிறது.
இந்த வருடம் பிப்ரவரி மாதம் வெப்பம் அதிகமாக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கடந்த 146 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெப்பம் அதிகமாக காணப்பட்டது.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கோடை காலம் முன்கூட்டியே தொடங்கும் எனவும் இந்த மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்பு உளளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில், வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை உயர்ந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு நேற்று அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. வெயில் அதிகரிக்கும் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும், பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. இளநீர், பழரசங்கள், எலுமிச்சை பானகம் குடிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.