நாகப்பட்டினம் - துாத்துக்குடி நான்கு வழிச்சாலைநிலம் கையகப்படுத்த ரூ.11.22 கோடி ஒதுக்கீடு
ராமநாதபுரம் மாவட்டம் வழியாக நாகப்பட்டினம் முதல் துாத்துக்குடி வரை நான்கு வழி பசுமை கடற்கரை சாலை அமைக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கு ரூ.11 கோடியே 22 லட்சத்து 41 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மூலம் நாகப்பட்டினம் முதல் தூத்துக்குடி வரை 331 கி.மீ.,க்கு நான்கு வழி பசுமை கடற்கரை சாலை அமைக்கப்படவுள்ளது.

இதற்கு ரூ.7000 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதித்ததையடுத்து நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கவுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 28.7 கி.மீ., திருவாரூரில் 40.3 கி.மீ., தஞ்சாவூரில் 40.6 கி.மீ., புதுக்கோட்டையில் 39.6 கி.மீ., ராமநாதபுரத்தில் 138.6 கி.மீ., துாத்துக்குடியில் 44 கி.மீ., என 331 கி.மீ.,க்கு நான்கு வழிச்சாலை அமைகிறது.

அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், கீழக்கரை, கடலாடியில் நிலங்கள் கையகப்படுத்த ரூ.4 கோடியே 92 லட்சத்து 15 ஆயிரம் ஒதுக்கப்பட்டது.

இப்பணிக்காக சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள், தனி தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், கண்காணிப்பாளர்கள் என 200 அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments