மணமேல்குடி ஒன்றியத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.இக் கூட்டத்தில் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய திரு செழியன் அவர்களின் தலைமையில் தொடங்கியது.

 மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் திருமதி இந்திராணி அவர்கள் மற்றும் மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

இக்கூட்டத்தில் பள்ளிப் பார்வை செயலில் எவ்வாறு மேற்கொள்வது பற்றிய தகவல்கள் குறித்தும் , எமீஸ் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் முடிக்கப்பட வேண்டும் என்றும் எண்ணும் எழுத்தும் தொடர்பான மதிப்பீடு செயல்பாடுகள் குறித்து விளக்கமும் வழங்கப்பட்டது.

 மேலும் இல்லம் தேடிக் கல்வி மையங்கள் செயல்படுவதை தொய்வு இல்லாமல் தலைமை ஆசிரியர்கள் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடர்பான பணிகளை சிறப்பாக செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இக் கூட்டத்தில் ஆசிரியர் பயிற்றுநர்கள் திரு முத்துராமன் திரு வேல்சாமி மற்றும் அனைத்து தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments