கோபாலப்பட்டிணத்தில் ஜூம்ஆ பள்ளி வளாகத்தில் ரஹ்மானியா குர்ஆன் மதரஸா ஆண்டு விழாவும்! நூருல் அய்ன் வளாகத்தில் ரஹ்மானியா பெண்கள் மதரஸா 24-வது ஆலிமா பட்டமளிப்பு விழா!மூன்று நாட்கள் நடைபெற்ற தொடர் நிகழ்ச்சிகள்!!!





புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் ரஹ்மானியா குர்ஆன் மதரஸா ஆண்டு விழா மற்றும் ரஹ்மானியா பெண்கள் மதரஸாவின் 24-வது ஆலிமா பட்டமளிப்பு விழா கடந்த 09/03/2023, 10/03/2023 மற்றும் 11/03/2023 ஆகிய தேதிகளில் ஜூம்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் இரண்டு தினங்களும், இறுதி நாள் நூருல் அய்ன் வளாகத்தில் வெகு விமர்சியாக மூன்று நாட்கள் நடந்து முடிந்தது.

முதல் நாள் நிகழ்வாக ஜூம்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் 09/03/2023 காலை கிராத் ஓதப்பட்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதை தொடர்ந்து ரஹ்மானியா ஆண்கள் மதரஸா, காட்டு குளம், கடற்கரை பள்ளி, அவுலியா நகர் மற்றும் ரஹ்மானியா பெண்கள் மதரஸாக்களின் மாணவர்களுக்கான கலிமா, சூரா மற்றும் ஹதீஸ் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்று அப்பொழுதே பரிசு வழங்கப்பட்டது.
 
இரண்டாவது நாள் நிகழ்வாக 10/03/2023 அன்று முதல் அமர்வாக ஜூம்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் மாணவர் முஹம்மது ஜூனைது கிராஅத் ஓத, ரஹ்மானியா ஆண்கள் மதரஸா, காட்டு குளம், கடற்கரை பள்ளி, அவுலியா நகர் மற்றும் ரஹ்மானியா பெண்கள் மதரஸாக்களின் மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடைபெற்றது. இதில் நடுவராக அம்மாப்பட்டினம் மஸ்ஜிதுல் ஹுதா ஜூம்ஆ பள்ளி இமாம் மெளலவி ஹாபிழ் A.முஹம்மது சித்திக் ஸிராஜி அவர்கள் இருந்தார்.   
   
இரண்டாவது அமர்வாக பகல் 12.00 மணியளவில் ரஹ்மானியா பெண்கள் மதரஸாவின் 24-வது ஆலிமா பட்டமளிப்பு விழா ஜூம்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கோபாலப்பட்டிணம் மெளலவி ஹாபிழ் R.ஷாஹூல் ஹமீது அல்குத்ஸி கிராஅத் ஓதினார். ஜமாத் செயலாளர் ஜனாப்.M.ராஜா முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார். கோபாலப்பட்டிணம் ஹிப்ளு மதரஸா ஆசிரியர் மெளலவி ஹாபிழ்.A.ரியாழ் முஹம்மது இஸ்லாமிய கீதம் பாடினார். அதனை தொடர்ந்து M.R.பட்டினம் அல் அஸ்ஹரிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வர் H.முஹம்மது ஜலாலுத்தீன் அவர்கள் சிறப்பு பேருரை நிகழ்த்தி ரஹ்மானியா பெண்கள் மதரஸாவில் பயின்று வந்த 8 மாணவிகளுக்கு ஆலிமா என்ற ஸனது வழங்கினார். மேலும் பட்டம் பெரும் மாணவிகளுக்கு ஜமாத் நிர்வாகிகள் பரிசு பொருட்கள், கேடயங்கள் வழங்கி கவுரவித்தனர். இந்நிகழ்வில் ஜமாத் தலைவர்கள் ஜனாப்.O.S.M.முஹம்மது அலி ஜின்னா மற்றும் ஜனாப்.A.S.M.செய்யது முஹம்மது ஆகியோர் தலைமை தாங்கினர். துணைத்தலைவர் ஜனாப்.M.K.R.முஹம்மது மீராசா, இணைச்செயலாளர் ஜனாப்.M.கலந்தர் நெய்னா முஹம்மது, துணைச்செயலாளர் ஜனாப்.E.சாகுல் ஹமீது, பொருளாளர் ஜனாப்.K.M.முஹம்மது உசேன், அல்ஹாஜ்.M.M.N. ஜகுபர் சாதிக், மர்ஹூம் ஹனிஃபா ஆலிம்&குடும்பத்தார்கள், ஜனாபா.S.ஹாஜிரா அம்மாள், ஜனாபா.A.நஜ்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் இமாம் மௌலவி ஹாபிழ்.பாஜில்.S.S.ஹாஜா ரஜபுத்தீன் மன்பயி, கோபாலப்பட்டிணம் மெளலானா மெளலவி அல்ஹாஜ்.N.M.A.இக்பால் பாகவி ஹஜ்ரத், கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி J.உஸ்மான் அலி நாஃபிஈ ஹஜ்ரத், கோபாலப்பட்டிணம் கடற்கரை பள்ளிவாசல் மௌலானா மௌலவி.M.S.முஹம்மது ஃபிர்தவ்ஸ் உலவி, கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் பள்ளிவாசல் துணை இமாம் மௌலானா மௌலவி ராஜா முஹம்மது மலைஹி, மீமிசல் ஜூம்ஆ பள்ளிவாசல் இமாம் மௌலவி ஹாபிழ்,F.ஹாஜா அலாவுத்தீன் வாஹிதி,கோபாலப்பட்டிணம் மௌலானா அல்ஹாஜ்.K.முஹம்மது அப்துல்லாஹ் மன்பயி,கோபாலப்பட்டிணம் மெளலானா மெளலவி.A.சாதிக் ஹுஸைன் ரஹ்மானி அதிரமி,கோபாலப்பட்டிணம் மெளலானா மெளலவி.R.M.A.R.ஹபீப் முஹம்மது ரஹ்மானி அதிரமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மூன்றாவது அமர்வாக மாலை மாணவ, மாணவிகளின் பேச்சு போட்டியை தொடர்ந்து அம்மாப்பட்டினம் மஸ்ஜிதுல் ஹுதா ஜூம்ஆ பள்ளி இமாம் மெளலவி ஹாபிழ் A.முஹம்மது சித்திக் ஸிராஜி சிறப்பு பயான் மற்றும் பேச்சு போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஜமாத்தார்கள் மற்றும் முக்கியஸ்தகர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. இறுதியாக ஜனாப்.S.R.M.J.முஹம்மது பிர்தெளஸ் M.A., M.PHI நன்றியுரை நிகழ்த்தினார்.
 

மூன்றாவது நாள் நிகழ்வாக 11/03/2023 அன்று நூருல் அய்ன் வளாகத்தில் ரஹ்மானியா பெண்கள் மதரஸாவில் பயின்று வந்த பெண்களுக்கான பேச்சு போட்டியும், பட்டம் பெற்ற மாணவிகளை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு சமூக ஆசிரியர் சகோதரி.பாத்திமா சபரி மாலா அவர்கள் சிறப்புரையாற்றினார். மேலும் பாத்திமா சபரிமாலாவின் 36 வயதினிலே என்ற தலைப்பில் அவர் எழுதிய புத்தகத்தின் பத்தாயிரமாவது புத்தகத்தின் பிரதியை ரஹ்மானியா பெண்கள் மதரஸாவில் பயின்று வரும் மாணவிகளுக்கு வழங்கி வெளியிட்டார்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments