அறந்தாங்கி அருகே சாக்கடையாக மாறி வரும் வைரிவயல் கண்மாயை சுத்தம் செய்ய கோரிக்கை




அறந்தாங்கி அருகே சாக்கடையாக மாறி வரும் வைரிவயல் கண்மாயை சுத்தம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வைரிவயல் கண்மாய்

அறந்தாங்கி அருகே உள்ள வைரிவயல் கிராமத்தில் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் மூலம் சுமார் 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மழைக்காலங்களில் அறந்தாங்கி நகர் பகுதியில் உள்ள அருகன்குளம், நெடுங்குளம், வண்ணான்குளம் ஆகிய குளங்களிலிருந்து நிரம்பி வழிகின்ற தண்ணீர் வைரிவயல் கண்மாய்க்கு வந்தடையும்.

இந்தநிலையில் நகர்பகுதியில் உள்ள குளங்களில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதால், அங்கிருந்து வருகின்ற தண்ணீரில் சாக்கடை கழிவு நீர் கலப்பதாக கூறப்படுகிறது. இதனால் குடிநீர் போன்று பராமரித்து வந்த கண்மாயில் தற்போது வெங்காயத்தாமரை படர்ந்து சாக்கடை கண்மாயாக மாறிவிட்டது என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

வெங்காய தாமரை

மேலும் விவசாய காலங்களில் கண்மாயிலிருந்து பாய்ச்சப்படுகின்ற தண்ணீரில் தொற்று கிருமிகள் உள்ளதால், வயலில் இறங்கி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சொறி உள்ளிட்ட அரிப்பு நோய்கள் வருகிறது. இதனால் விவசாய வேலைக்கு யாரும் வருவதில்லை என கூறப்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் கண்மாயில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுத்து அதனை சுத்தம் செய்ய வேண்டும் என்றும், கண்மாயில் படர்ந்துள்ள வெங்காய தாமரையை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments