நாடாளுமன்ற மக்களவையில் நேற்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:- "தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூர் அமைந்துள்ளது. இது புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கிக்கு அடுத்தபடியாக 3-வது பெரிய மையமாகும். கீரனூரில் இருந்து ஐ.ஐ.எம்., அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியன திருச்சியை ஒப்பிடும்போது அருகில் உள்ளன. கீரனூர் ரெயில் நிலையத்தை 100 கிராமங்களை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். திருச்சி-ராமேசுவரம் பயணிகள் ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயிலாக தரம் உயர்த்தப்பட்டபிறகு, கீரனூரில் நிறுத்தப்படுவதை ரெயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. அதேசமயம் குமாரமங்கலம் மற்றும் வெள்ளனூர் போன்ற சிறிய ரெயில் நிலையங்களில் ரெயில் நிறுத்தம் தொடர்கிறது.
 இதனால் பொதுமக்கள் குறிப்பாக மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். மேலும், பல்லவன் மற்றும் சேது விரைவு ரெயில்களை கீரனூரில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து வருகிறது.எனவே திருச்சி-ராமேசுவரம், பல்லவன், சேது விரைவு ரெயில்களை கீரனூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல தேவையான நடவடிக்கைகளை மத்திய ரெயில்வே மந்திரி உடனடியாக எடுக்க வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.
இது குறித்து திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் MP அவர்கள் முகநூலில் வெளியிட்டுள்ள  அறிக்கையில் 
நாள்14.03.23
செய்தி
    மத்திய மாநில முன்னாள்  அமைச்சரும்  திருச்சிராப்பள்ளி  பாராளுமன்ற      உறுப்பினருமான திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள்   மக்களவையில்  இன்று (14.3.23)  விதி எண் 377ன் கீழ்  மாண்புமிகு மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கீழ் கண்ட பிரச்சனையை குறித்து அவரது கவனத்திற்கு கொண்டுவந்தார்.    
  அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.
                                                                    கோ. ஸ்ரீதர்
                                                                நேர்முக உதவியாளர்
 கீரனூர், ஒரு டவுன் பஞ்சாயத்து மற்றும் தாலுகா தலைமையகம் ஆகும். அது தமிழ்நாட்டின் புதுக்கோட்டை  மாவட்டத்தில் அமைந்துள்ளது.  இது புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கிக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய மையமாகும். கீரனூரில் இருந்து - ஐஐஎம், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவை திருச்சியை ஒப்பிடும்போது அருகில் உள்ளன.  கீரனூரில் உள்ள ரயில் நிலையத்தை, கீரனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 100 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 50,000 பேர் பயன்படுத்தி வருகின்றனர். திருச்சி - ராமேஸ்வரம் பயணிகள் இரயில், எக்ஸ்பிரஸ் ரயிலாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு கீரனூரில் நிறுத்தப்படுவதை ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது, அதேசமயம் குமாரமங்கலம் மற்றும் வெள்ளனூர் போன்ற சிறிய ரயில் நிலையங்களில் இரயில் நிறுத்தம் தொடர்கிறது.
 இதனால், பொதுமக்கள் குறிப்பாக மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், பல்லவன் மற்றும் சேது விரைவு ரயில்களை கீரனூரில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது.  பயணிகள் குறைந்தபட்ச தூரமான 29 கி.மீ. தொலைவு உள்ள திருச்சிராப்பள்ளிக்கோ அல்லது 24 கி.மீ. தொலைவு உள்ள புதுக்கோட்டைக்கு அவர்கள்  இரயில் வண்டிகளைப் பிடிக்க, தங்கள் பயணத்திற்காக பெரும் தொகையைச் செலவிட முடியாத நிலையில் இருந்து வருகிறார்கள். 
 இரயில் சேவைகள் என்பது அடிப்படையில் பொது மக்களின் நலனுக்கானததே. எனவே, (i) திருச்சி - ராமேஸ்வரம் (ii) பல்லவன் மற்றும் (iii) சேது விரைவு ரயில்கள் கீரனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுவதற்குத் தேவையான உடனடி நடவடிக்கையை மாண்புமிகு இரயில்வே அமைச்சர் அவர்கள் உடனடியாக எடுக்குமாறு பணிவுடன் வேண்டிக்  கேட்டுக் கொள்கிறேன். 
 சு. திருநாவுக்கரசர், M.P.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia



0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.