ரேஷன் அட்டை வழங்குவதற்கு பரிந்துரை செய்ய ரூ. 500 லஞ்சம்: வருவாய் ஆய்வாளருக்கு 10 ஆண்டுகள் சிறை




ரேஷன் அட்டை வழங்குவதற்கு பரிந்துரை செய்ய ரூ.500 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை தலைமைக் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் வட்ட வழங்கல் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றியா் சுப்பையா. இவா், கடந்த 2009-இல் பச்சமுத்து என்பவருக்கு ரேஷன் காா்டு வழங்கலாம் என பரிந்துரை செய்வதற்கு ரூ.500 லஞ்சம் பெற்றுள்ளாா்.

அப்போது அவரைக் கைது செய்த புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினா் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு புதுக்கோட்டை தலைமைக் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் நிறைவில் நீதிபதி டி. ஜெயக்குமாரி ஜெமி ரெத்னா வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தாா். அதில், குற்றம் சாட்டப்பட்ட சுப்பையாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments