எஸ்.பி.பட்டினத்தில் அரசு தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா!எஸ்.பி.பட்டினத்தில் அரசு தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் அரசு தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா நேற்று 20.03.2023 அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்சியை முன்னாள் மாணவர்களான SPP ஸ்கூல் பிரண்ட்ஸ் வாட்சாப் குழுமம் 1980 முதல் 1990 வரை பயின்றவர்கள் நடத்தினார்கள். இதில் மாணவர்களின் பேச்சுப்போட்டி, விழிப்புணர்வு நாடகங்கள் மற்றும் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு SPP ஸ்கூல் பிரண்ட்ஸ் சார்பாக நினைவு பரிசும், கல்விக்காக இன்று வரை துணைபுரிந்து வரும் எஸ்.பி.பட்டினம் முஸ்லீம் ஜமாத்திற்கு விருதும், திருவாடானை ஒன்றிய பெருந்தலைவர் ப.முகம்மது முக்தார் BSc.BL அவர்களுக்கு சிறந்த கல்வியாளருக்கான விருதும், எஸ்.பி.பட்டினம் அரசு தொடக்கபள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் நீண்ட காலங்களாக பணி செய்து வரும் ஆசிரியர்களான செல்வம், பெர்னாட் மேரி, ராதிகா, துரைராஜ், பாக்கிய மீனாள், ராஜினி, சாந்திமேரி ஆகியோருக்கும் இல்லம் தேடி கல்விப்பணி செய்யும் ஆசிரியர்களுக்கும் SPP ஸ்கூல் பிரண்ட்ஸ் சார்பாக விருதுகள் வழங்கப்பட்டது.

மேலும் SPP.ஸ்கூல் பிரண்ட்ஸ் சார்பாக 96 மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள், பதக்கங்கள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற நாற்பது மாணவர்களுக்கு மூன்று புத்தகங்கள் வீதம்  சுமார் 120 புத்தகங்களை மாணவர்கள் ஆர்வமுடன் படிக்கும் விதமாக எஸ்.பி.பட்டினம் நஜ்முல் இஸ்லாம் எஜிகேசனல் ட்ரஸ்ட் நிர்வாகிகள் வழங்கினார்கள். 

இநிகழ்சியில் திருவாடானை ஒன்றிய பெருந்தலைவர், வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரிய பெருமக்கள், மானவ-மாண்வியர் பெற்றோர்கள், எஸ்.பி.பட்டினம் காவல்துறை சார்பு ஆய்வாளர், எஸ்.பி.பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், எஸ்.பி.பட்டினம் ஜாமாஅத் தலைவர் மற்றும் நிர்வாக பெருமக்கள், கவிஞர் பாக்கி, எஸ்.பி.பட்டினம் வாட்ஸாப் குழுக்களின் தலைவர்கள், அதன் நிர்வாகிகள், மற்றும் இந்நிகழ்சியை நடத்திய எஸ்.பி.பி.ஸ்கூல் பிரண்ட்ஸின் மீரான் மைதீன், மீடியா சாதிக், செய்யது முபாரக், சகுபர் சாதிக், நெய்னா முகமது, முகமது யூசுப், அப்துல் ஹலீம், ரஹ்மத் அலி, அப்துல் ஹக், செய்யது அலி, NMA.சாதிக், SM.சகுபர் சாதிக், SM.அசரப் கான் ஆகியோரும் இளைய தம்பிமார்கள் ஜின்னா, நெய்னாஜி, மைதீன், சாகுல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல்: மீடியா சாதிக், செய்தி தொடர்பாளர், எஸ்.பி.பட்டிணம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments