திருவாரூர் திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக தாம்பரம் செங்கோட்டை இடையே வாரம் மும்முறை புதிய ரெயில்திருவாரூர் திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு புதிய ரெயில் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படுகிறது.

 செங்கோட்டையில் இருந்து சென்னை தாம்பரத்துக்கு வாரத்தில் 3 நாட்கள் ரெயில் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ரெயில் வருகிற ஏப்ரல் மாதம் 8-ந் தேதி பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

தாம்பரத்தில் இருந்து செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை அல்லது இரவு புறப்பட்டு மறுநாள் காலையில் செங்கோட்டையை சென்றடையும்.

மறுமார்க்த்தில் 
இந்த ரெயில் செங்கோட்டையில் இருந்து புதன், வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் பிற்பகலில் / மாலை புறப்பட்டு, மறுநாள் அதிகாலை தாம்பரத்தை சென்றடையும். 

இந்த ரெயில் தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பை, சேரன்மாதேவி, நெல்லை வழியாக செல்வதுடன், அதை தொடர்ந்து புதிய வழித்தடமாக விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், கடலூர் (திருப்பாதிரிபுலியூர்), விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. 

அதிகாரப்பூர்வ ரெயில் கால அட்டவணை நிறுத்துங்கள் விரைவில்  வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாம்பரம் - செங்கோட்டை வழித்தடம்

செங்கல்பட்டு
விழுப்புரம்
கடலூர்
சிதம்பரம்
சீர்காழி
மயிலாடுதுறை
திருவாரூர்
திருத்துறைப்பூண்டி
அதிராம்பட்டினம்
பட்டுக்கோட்டை
பேராவூரணி 
அறந்தாங்கி
காரைக்குடி
சிவகங்கை
மானாமதுரை
அருப்புக்கோட்டை
விருதுநகர்
சாத்தூர்
கோவில்பட்டி
வாஞ்சி மனியாச்சி
திருநெல்வேலி
அம்பாசமுத்திரம்
தென்காசி

Photos Credit: Sibi Kumar 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments