இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் விடுதலை




எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை விடுவித்து இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

4 மீனவர்கள் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து கடந்த 11-ந் தேதி ஆரோக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவரும் மற்றும் அசோக், கருப்பு, சக்தி ஆகியோரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இந்த நிலையில் மீனவர்கள் 4 பேரையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.

விடுதலை

இந்த நிலையில் மீனவர்கள் மீதான வழக்கு நேற்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கஜநீதிபாலன், சிறைபிடிக்கப்பட்ட 4 மீனவர்களையும் விடுவித்து உத்தரவிட்டார். மேலும் இனிமேல் எல்லை தாண்டி மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார். அதுமட்டுமின்றி மீனவர்கள் பயன்படுத்திய விசைப்படகு அரசுடைமையாக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் சொந்த ஊர் திரும்புவார்கள் என தெரிகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments