கட்டுமாவடியில் SDPI கட்சியின் மற்றுமொரு புதிய கிளை தொடக்கம்
கட்டுமாவடியில் SDPI கட்சியின் மற்றுமொரு புதிய கிளை தொடங்கப்பட்டது.

SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கட்டுமாவடி கிளையின் கிளை கூட்டம் கடந்த 21.03.2023 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் U.செய்யது அஹமது, தொகுதி தலைவர் M.முகமது அஜீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கட்டுமாவடி கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கட்டுமாவடியில் புதிய கிளை தொடங்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கிளை தொடங்கப்பட்டது. தொடர்ந்து புதிய கிளையின் நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன்படி புதிய கிளையின் தலைவராக ஷமீருல் மஹ்மூத், துணை தலைவராக சேக் அப்துல்லா, செயலாளராக யாசர் அரபாத் துணை செயலாளராக ஹாஜா முஹைதீன் , பொருளாளராக முகமது இலியாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

புதிய கிளையின் நிர்வாகிகளின் பணி சிறக்க மாவட்டம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

வெளியீடு,
சமூக ஊடக அணி
SDPI கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments