எஸ்.பி.பட்டினத்தில் ராயல் பிரண்ட்ஸ் வாட்சப் குழு சார்பாக நோன்பை முன்னிட்டு ஏழைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கல்!எஸ்.பி.பட்டினத்தில் ராயல் பிரண்ட்ஸ் வாட்சப் குழு சார்பாக நோன்பு காலத்தை முன்னிட்டு ஏழைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் ராயல் பிரண்ட்ஸ் வாட்சப் குழு சார்பாக வருடந்தோறும் ரமலானில் ஏழைக் குடும்பத்தினருக்கு உணவு பொருட்கள் வழங்குவது வழக்கம். அதனடிப்படையில் நோன்பு நோற்க தேவையான உணவு சமைக்க அரிசி, பருப்பு, ஆயில், மசாலா பொருட்களுடன் அடங்கிய கிட் 4- வது வருடமாக சுமார் 351 ஏழைக் குடும்பத்தினரை தேர்வு செய்து மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பீட்டில் டோக்கன் அடிப்படையில்  வழங்கப்பட்டது.

தகவல்: மீடியா சாதிக், SP பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments