திருப்பதி - பட்டுக்கோட்டை இடையே இயக்கப்படும் பேருந்தை பேராவூரணி வரை நீட்டிக்கப்படும் - சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்




பட்டுக்கோட்டையிலிருந்து திருப்பதிக்கு செல்லும் அரசு விரைவு பேருந்தை பேராவூரணி வரை நீடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், பேராவூரணி மக்கள் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பேருந்து நிலையத்திற்கு சென்று தான் திருப்பதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால், பேராவூரணியில் இருந்து திருப்பதிக்கு அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்தை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்று சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கேள்வி எழுப்பினார்.


அதற்கு பதிலளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், பட்டுக்கோட்டையில் இருந்து திருப்பதிக்கு அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்து செல்வதாகவும், அதை பேராவூரணி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும், மத்திய  அரசு 15 ஆண்டுகள் பயன்படுத்திய பேருந்துகளை scrap-ல் போட வேண்டும் என தெரிவித்துள்ளதாகவும், புதிய பேருந்துகள் வந்தவுடன் பேராவூரணி வழித்தடத்திற்கும், புதிய வழித்தடங்களுக்கும் பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments