கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழை நீர்! நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை!!கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் கோபாலப்பட்டிணம் மட்டுமல்லாது சுற்றுப்புற ஊர்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கோபாலப்பட்டிணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 21.03.2023 அதிகாலை பெய்த மழையின் காரணமாக இந்த பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. தேங்கி நிற்கும் மழை நீரில் கொசு உற்பத்தியாகி சுகாதார கேடு ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது. எனவே மாணவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படுவதற்கு முன்னர் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமின்றி இனி பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments