ரமலான் நோன்பு தொடங்கியது: கோபாலப்பட்டிணம் பள்ளிவாசல்களில் தராவீஹ் தொழுகை!



கோபாலப்பட்டிணம் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ரமலான் நோன்பு கடைபிடிப்பதும் ஒன்றாகும். இந்த ரமலான் மாதத்தில் 30 நாட்களும் நோன்பு இருந்து இறைவனை தொழுகை செய்வது இஸ்லாமியர்களின் கடமை. ஷாபான் மாதத்தின் 30-ம் நாளில் வானில் தோன்றும் பிறையை அடிப்படையாக கொண்டு ரமலான் நோன்பு தொடங்கப்படும். ரமலான் நோன்பின்போது சஹர் எனப்படும் உணவை அதிகாலை 4 மணிக்கே சாப்பிட்டு, சூரியன் உதயத்துக்குப்பின் நோன்பு இருப்பார்கள். நாள் முழுவதும் தண்ணீர், உணவு அருந்தாமலும், சூரியன் மறைந்தபிறகு நோன்பை முடித்துக் கொள்வார்கள். 

இந்தநிலையில் ரமலான் நோன்பு தொடங்கியதையடுத்து கோபாலப்பட்டிணம், மீமிசல், ஏம்பக்கோட்டை, ஆர்.புதுப்பட்டினம், அரசநகரிப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், அம்மாபட்டினம், மணமேல்குடி, கிருஷ்ணாஜிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நோன்பு நடைபெறும் 30 நாட்களும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையும், மாலை நேரங்களில் நோன்பு கஞ்சி வழங்குவது வழக்கம். அதன்படி சிறப்பு தொழுகை நடைபெற்றது. 30-ம் நாளின் முடிவில் ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments