SPP சமூக ஆர்வலர்கள் சங்கம் சார்பில் அரசு உதவித்தொகை பெற தகுதியோடையோர் கணக்கெடுப்பு பணி!



SPP சமூக ஆர்வலர்கள் சங்கம் சார்பில் அரசு உதவித்தொகை பெற தகுதியோடையோர் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் SPP சமூக ஆர்வலர்கள் சங்கம் சார்பாக அரசு சார்பில் வழங்கப்படும் உதவித்தொகை பெற தகுதியுடைய நபர்களின் வீட்டிற்கு சென்று அர்களை சந்தித்து கணக்கு எடுப்பது என நிர்வாகத்தின் சார்பாக முடிவு செய்யப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக சங்க நிர்வாகிகள் கருக்க வெட்டித்தெரு, அம்பலம் தெரு மருவண்டி குண்டுப் பகுதியில் தகுதியுடையோரை சந்தித்து ஆலோசனை மற்றும் ஆவணங்கள் பெறப்பட்டது.

இந்த கணக்கெடுப்பு பனியின் போது முதியோர் உதவித்தொகை கடந்த ஒரு வருடமாக வரவில்லை என புகார் கூறினார். அதனடிப்படையில் அவர்களிடம் ஆவணங்கள் பெறப்பட்டு சம்ந்தபட்ட துறையை அணுகி விரைவில் உதவித்தொகை பெற வழிவகை செய்து கொடுக்கபட உள்ளது. விதவை பெண்கள் உதவித் தொகை ஒரு வருடம் மற்றும் 8 மாதங்களாக பணம் வராவில்லை என இரண்டு பெண்கள் புகார் கூறியதையடுத்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் தங்களின் தாய் அல்லது தந்தையை இழந்தால் அவர்களுக்கு வைப்பு நிதியாக ரூபாய் 75 ஆயிரம் அரசு வழங்குகிறது. அதை அந்த மானவர்களின் திருமணத்திற்கு உதவும் வகையில் ஓரியூரில் படிக்கும் மூன்று மாணவர்களின் தாய்மார்களிடம் இச்சலுகைகளை பெற்றிட ஆலோசனை வழங்கப்பட்டது. ஒரு பெண்ணின் கணவர் விபத்தில் மரணமடைந்த நிலையில் அவரின் விபத்து வழக்கு பல வருடங்களாக நடந்த வருகிறது. அதை விரைந்து முடித்து தர கோரிக்கை வைத்தார்கள். அவர்களின் வழக்கறிஞர் விபரஙக்ளை கேட்டறிந்தோம் மற்றும் அந்த வழக்கு சம்ந்தமான விபரங்கள் தெரியபடுத்தப்படும்.

தகவல்: சாதிக்-செய்தி தொடர்பாளர், SPP சமூக ஆர்வலர்கள் குழு, எஸ்.பி.பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments