மீமிசல் பகுதியில் துணை மின்நிலையம் அமைக்க வேண்டும் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தகவல்




ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றியக்குழுத்தலைவர் உமாதேவி தலைமையில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய ஆணையர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பேசுகையில் ஆவுடையார்கோவில் மற்றும் அதனை சுற்றி 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் பள்ளி மாணவர்கள் காலை, மாலை இருநேரங்களில் கடைவீதி வழியாக செல்கின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி அப்பகுதியில் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பில்லுக்குடி, கொழுவனூரில் அங்கன்வாடி அமைக்க வேண்டும். புத்தாம்பூரில் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. 

மீமிசல் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க போதிய இடம் இல்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டசபையில் தெரிவித்துள்ளார். மீமிசல் பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு துணை மின்நிலையம் அமைக்க வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments