கோபாலப்பட்டிணத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் - ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி அவர்களிடம் ST.ராமச்சந்திரன்.M.L.A வலியுறுத்தல்!
கோபாலப்பட்டிணத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி அவர்களிடம் அறந்தாங்கி சட்ட மன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் கோரிக்கை மனு அளித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் அதிக மக்கள் தொகையுடன் 12 குக்கிராமங்களையும், 8 ஆயிரம் வாக்காளர்கள் மற்றும் 12 வார்டுகளை கொண்ட ஊராட்சி நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி ஆகும். இந்த ஊராட்சியில் உள்ள கோபாலப்பட்டிணம் கிராமத்தில் சுமார் 4 ஆயிரம் வாக்காளர்களையும், 7 வார்டுகளையும் கொண்ட பெரிய கிராமம் ஆகும். நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு வரக்கூடிய நிதியில் 12 கிராமங்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்ய வேண்டி உள்ளது. கோபாலப்பட்டிணம் அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய கிராமமாக இருப்பதால் போதிய நிதி கிடைப்பதில்லை என்பதால் கோபாலப்பட்டிணத்தை நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் இருந்து பிரித்து தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இது குறித்து கோபாலப்பட்டிணம் ஜமாத் நிர்வாகம், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.   

இதுகுறித்து நேற்று (31.03.2023) மாண்புமிகு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்களை நேரில் சந்தித்து அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் அவர்கள் கோரிக்கை மனு அளித்தார். அதில் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை இரண்டாக பிாித்து அதாவது கோபாலப்பட்டிணத்தை தலைமையிடமாக கொண்டு கோபாலப்பட்டிணம் ஊராட்சி எனவும் மீதமுள்ள அனைத்து கிராமங்களையும் ஏற்கனவே உள்ளபடி நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி என்றும் பிரிக்க கோரி வலியுறுத்தினார். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்த கோரிக்கையை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றித் தருவதாக தெரிவித்தார்.

ஏற்கனவே இது சம்பந்தமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு 5000க்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட கோபாலபட்டிணத்தை தனி ஊராட்சியாக அரசு அனுமதித்து ஆணை வழங்கிட தமிழக முதல்வருக்கு அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST ராமச்சந்திரன் MLA கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது ..
'

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments