அறந்தாங்கியில் புதிதாக 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் ஆய்வு




அறந்தாங்கியில் புதிதாக 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.டி.ராமச்சந்திரன்   ஆய்வு செய்தார்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிகளில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் வகையில் இன்று அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ் டி ராமச்சந்திரன் ஆய்வு செய்தார் 

குறிப்பாக அறந்தாங்கி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த  அறந்தாங்கி  பேருந்து நிலையத்தை விரிவு படுத்த வேண்டும் என்று அறந்தாங்கி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர் அது மட்டும் இன்றி அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றவுடன் சட்டமன்றத்தில் புதிய விரிவு படுத்தப்பட்ட பேருந்து நிலையம் வேண்டுமென அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ் டி ராமச்சந்திரன் கோரிக்கை வைத்தார்.

 கோரிக்கையின் அடிப்படையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் பட்ஜெட் தாக்கல் கூட்டத்தில் அறந்தாங்கி பேருந்து நிலையத்திற்காக ரூபாய் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது இதனால் அறந்தாங்கி மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இதற்காக முயற்சித்த சமூக அலுவலர்களுக்கும் தொடர்ந்து பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஆய்வின் போது அறந்தாங்கி நகராட்சி ஆணையர் லீனா சைமன் மற்றும்  இளைஞர் காங்கிரஸ் வட்டார தொகுதி தலைவர் கார்த்திக் மற்றும் அறந்தாங்கி நகர மன்ற தலைவர் கிருபாகரன், அசாருதீன்,வீராசாமி, மற்றும் ஒன்றிய தலைவர் முருகன் ,அரசு அதிகாரிகள் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் என பலர் உடன் இருந்தனர்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments