கோபாலப்பட்டிணம் காட்டுகுளத்தில் வளர்ந்து வரும் கோரை புற்கள் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!






கோபாலப்பட்டிணம் காட்டுகுளத்தில் வளர்ந்து வரும் கோரை புற்களை ஊராட்சி நிர்வாகம் அகற்ற பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் மொத்தம் ஆறு குளங்கள் உள்ளது. இதில் இரண்டு குளங்களை மட்டுமே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதில் ஒன்று தான் காட்டுக்குளம் ஆகும். இந்த குளத்தினை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தக்குளத்தில் இருந்த நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசிய நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியேற்றப்பட்டது. 

இந்தக் குளம் சுமார் 7 ஆண்டுக்கு முன் தூர் வாரப்பட்டது. சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் தண்ணீர் வரத்து இல்லாததால் குளம் குட்டை போல் உள்ள நிலையில் அதில் பள்ளிவாசல் அருகே கோரை புற்கள் முளைத்துள்ளது. இந்தக்கோரை காரணமாக குளத்தில் உள்ள தண்ணீர் விரைவில் மாசடைய வாய்ப்புள்ளது. எனவே தண்ணீர் இல்லாத இந்த நிலையில் குறைவாக உள்ள இந்த கோரை புற்களை அகற்றி குளத்தில் உள்ள தண்ணீரை பாதுகாக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் குளத்திற்கு தண்ணீர் வரக்கூடிய கால்வாயை ஊராட்சி நிர்வாகம் தூர் வார வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments