பட்டுகோட்டையில் இருந்து புதுச்சேரிக்கு அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதிய விரைவு பேருந்து சேவையை தொடங்க தமிழ்நாடு முதல்வர்களுக்கு கோரிக்கை புதிய பேருந்து வழித்தடத்தில் சேவை தொடங்கும் போது முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் அறிவிப்பு
பட்டுகோட்டையில் இருந்து புதுச்சேரிக்கு  அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக  புதிய விரைவு பேருந்து சேவையை தொடங்க  தமிழ்நாடு முதல்வர்களுக்கு கோரிக்கை புதிய பேருந்து வழித்தடத்தில் சேவை தொடங்கும் போது முன்னுரிமை அளிக்கப்படும்  என்று அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் அறிவிப்பு
பட்டுகோட்டையில் இருந்து புதுச்சேரிக்கு  அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக  புதிய விரைவு பேருந்து சேவையை தொடங்க  தமிழ்நாடு முதல்வர்களுக்கு கோரிக்கை புதிய பேருந்து வழித்தடத்தில் சேவை தொடங்கும் போது முன்னுரிமை அளிக்கப்படும்  என்று அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் அறிவித்துள்ளது 

இது குறித்து நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் மாவட்ட செயலாளர் ஜலீல் முகைதீன் தமிழக அரசுக்கு  கோரிக்கை மனு அனுப்பியிருந்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, 

புதுசேரி அரசு ஜிப்மர் மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சை பெற மக்கள் புதுச்சேரிக்கு அடிக்கடி செல்கிறார்கள் இதுநாள் வரை பட்டுக்கோட்டையிலிருந்து புதுச்சேரிக்கு நேரடி பேருந்து வசதி கிடையாது. புதுசேரி செல்வதாக இருந்தால் கும்பகோணம் சென்று அங்கிருந்து தான் போக கூடிய சூழ்நிலை உள்ளது. பட்டுக்கோட்டையிலிருந்து கும்பகோணம் 70 கி.மி தொலைவில் உள்ளது. எனவே கிழக்கு கடற்கரை சாலையின் வழியாக புதிய பகல்நேர பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க தங்களை பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட் பதில் அளித்துள்ளது.

அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது,

பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் புதுச்சேரி தட நீளம் 240 . கி.மீ ஆகும். இவ்வழித்தடம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என இரு மாநில பகுதிகள் அடங்கிய வழித்தடம் ஆகும். 

பட்டுக்கோட்டை to நாகப்பட்டினம், நாகப்பட்டினம் to புதுச்சேரி என பகுதி பகுதியாக பேருந்து வசதி உள்ளது.

இராமநாதபுரம், கமுதி, பரமக்குடி கிளைகளிலிருந்து
அதிராம்பட்டினம் வழியாக சிதம்பரம் பேருந்து வசதி உள்ளது. சிதம்பரம் to புதுச்சேரி அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. 

எனவே,இப்பகுதி மக்கள் மேற்கண்ட பேருந்து வசதிகளையே தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையும், அரசு புதிய தட பேருந்துகளை (இரு மாநில) இயக்கிட அறிவிப்பு செய்யும்போது   இக்கோரிக்கைக்கு முன்னுரிமை கொடுத்து பரிசீலிக்கலாம் என்பது இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments