தமிழகத்தின் நீண்ட மேம்பாலம் என்ற பெருமையுடன் மதுரை - நத்தம் புதிய மேம்பாலத்தில் உற்சாகமாக பயணித்த பொதுமக்கள்




மதுரை - நத்தம் சாலையில் கட்டப்பட்டுள்ள 7.3 கி.மீ. நீள மேம்பாலத்தை நேற்று பிரதமர் காணொலி மூலம் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, மாலை 6.47 மணிக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. பாலத்தின் வழியே மக்கள் உற்சாகமாக பயணித்தனர்.

மதுரை - நத்தம் இடையே நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. நகர் பகுதியில் சொக்கி குளத்தில் இருந்து ஊமச்சிகுளத்தை அடுத்த மாரணி வரை 7.3 கிமீ தூரத்தில் நிலம் கையகப்படுத்தும் பிரச்சினையால் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டது. பாலம் இருவழியாகவும், கீழே இரு வழியாகவும் புதிய வடிவில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

நத்தத்திலிருந்து துவரங்குறிச்சி வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு விட்டது. ஊமச்சிகுளத்திலிருந்து நத்தம் வரையிலான 4 வழிச்சாலையில் இன்னும் சில இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், சென்னையில் நேற்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைத்த பிரதமர் ரூ.613 கோடியில் கட்டப்பட்ட, மதுரை- நத்தம் சாலை மேம்பாலத்தையும், நத்தம் - துவரங்குறிச்சி 4 வழிச்சாலையையும் காணொலி மூலம் திறந்துவைத்தார்.

பிரதமர் பாலத்தை திறந்ததும் பொதுமக்களின் வாகனங்களை மேம்பாலத்தில் அனுமதிக்கும் வகையில், மதுரையில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சொக்கிகுளம் அருகே பாலம் தொடங்கும் இடத்தில் கரும்பு, வாழை மரங்களால் பசுமை தோரண வாயிலை அமைத்திருந்தனர். மாலை 6.47 மணிக்கு பாலத்தை திறந்து வைத்ததும் பொதுமக்களின் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments