கோபாலப்பட்டிணம் பொதுமக்களுக்கு மின்துறை சம்பந்தமாக முக்கிய அறிவிப்பு!
கோபாலப்பட்டிணம் பொதுமக்களுக்கு மின்துறை சம்பந்தமாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம்-பழைய காலனி பகுதிக்கு ஆரிப் கடை அருகே உள்ள மின்மாற்றியில் இருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அதில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று ஏப்ரல் 10 காலையில் மின்சாரம் தடை விட்டு விட்டு வந்தது .

இதனையடுத்து மின் ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

மின்சார ஊழியர்கள் கூறும் போது,

இந்த மின்மாற்றியில் இருந்து விநியோகம் செய்யப்படும் பகுதியில் உள்ள மக்கள் யாரும் இன்று ஏப்ரல் 10 திங்கட்கிழமை இரவு 10.00 மணி வரை ஏசி, மோட்டார் போன்றவற்றை பயன்படுத்தி வேண்டாம் எனவும் 10 மணிக்கு மேல் வழக்கம் போல் பயன்படுத்தி கொள்ளலாம் என  கூறினார்.

இது சம்பந்தமாக காட்டுக்குளம் பள்ளியில் மைக்கில் அறிவிப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments